மதுரை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், பாஜகவின் பல தலைவர்கள் அன்றாடம் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றன. தமிழகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் மோடி நேற்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தனது தியானத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். அவரை தொடர்ந்து, மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மோகன் யாதவிக்குப் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த அவர் வெளியே வந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென் இந்தியாவில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளேன். இப்போது சிதம்பரம், ராமேஸ்வரம், திருப்பதி பாலாஜி கோவில்களில் தரிசனம் செய்து முடித்துள்ளேன்" எனக் கூறினார்.
மேலும், "இவ்வாறான இறைவனின் அருளால்தான் நேற்று வெளிவந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தங்களுக்கு (பாஜக) சாதகமாக அமைந்திருக்கிறது.
இந்த கணிப்புகள் மூலம், மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி ஆள்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அரசாங்கம் மீண்டும் பாரதத்தின் வளர்ச்சிப் பாதைக்கான அரசாங்கமாக இருக்கும். இந்தியா மட்டுமின்றி உலகமே வியக்கும் வகையில் முதன்மை அரசாங்கமாக மோடி அரசின் பாஜக ஆட்சி அமையும். இந்து சனாதனம் இந்த உலகின் அனைத்துக்கும் வழிகாட்டியாக இருக்கும்: என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறினார்.
இதையும் படிங்க: மாநில வாரியாக மக்களவை தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்! வெற்றி யாருக்கு? -