ETV Bharat / state

“நான் பட்டியலின பெண் என்பதால், என் பெயரை அழித்து விட்டார்கள்” - கடிச்சம்பாடி ஊராட்சிமன்ற தலைவர் புகார்! - Kadichambadi Panchayat President

Kadichambadi Panchayat President Issue: கும்பகோணம் அருகே கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட முகப்பில், எழுதப்பட்டிருந்த தனது பெயரை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் சுவாமிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடிச்சம்பாடி ஊராட்சிமன்ற அலுவலகம்
கடிச்சம்பாடி ஊராட்சிமன்ற அலுவலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 6:30 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவராக மலர்கொடி சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். பட்டியல் சமூகத்தினரான இவர் தான் இந்த ஊராட்சியின் முதல் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர். இவர், இதற்கு முன்பு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். அதிமுக கட்சியிலும் இவர் தஞ்சை கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவியாக உள்ளார்.

பட்டியல் சமூகத்தினரான இவர், ஊராட்சி மன்ற தலைவராகப் பதவியேற்றது முதல் தொடர்ந்து பிற சமூகத்தைச் சேர்ந்த துணைத் தலைவர் சிவபாலன் (பாமக), மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்குமார் (திமுக) ஆகியோர் தன்னை தொடர்ந்து பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்து வருவதாக மலர்கொடி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த கடிச்சம்பாடி ஊராட்சி மன்றத்தில் ஊராட்சியில் 660 குடியிருப்புகளில் 2050 பேர் வசித்து வருகின்றனர். மொத்தம் உள்ள ஆறு வார்டுகளில், 1. ஆனந்தராஜ் (அதிமுக), 2. சிவபாலன் (பாமக), 3. விமல் (திமுக), 4. அஞ்சம்மாள் (திமுக), 5. மகேஸ்வரி (திமுக), 6. மனோகரன் (திமுக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களாகவும், ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலின சமூகத்தினருக்குச் சேர்ந்தவருக்கு ஒதுக்கப்பட்டதால், இப்பொறுப்பில் அதிமுகவைச் சேர்ந்த மலர்கொடி சீனிவாசன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2வது வட்டத்தைச் சேர்ந்த சிவபாலன் (பாமக) மன்ற உறுப்பினர்களால் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் துணைத் தலைவர் சிவபாலன் (பாமக) மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்குமார் (திமுக) ஆகியோர் மேலாதிக்க சிந்தனையோடு, தன்னை தொடர்ந்து பணி செய்ய விடாமல் தடுத்து தொந்தரவு செய்து வருவதாக, அதிகாரிகளிடம் தொடர்ந்து மலர்கொடி சீனிவாசன் புகார் தெரிவித்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 17ம் தேதி ரூபாய் 29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் இவ்வூராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்துள்ளார். அப்போது அலுவலக கட்டிட முகப்பில் “மலர்கொடி சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர்” என பெயிண்டால் எழுதப்பட்டிருந்தது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்த பெயர் மட்டும் பிளக்ஸ் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்திக் கொள்ளப்பட்டதன் எதிரொலியாக அந்த பிளக்ஸ் அகற்றிய போது, அதில் ஊராட்சி மன்ற தலைவர் பெயர் பச்சை நிற பெயிண்ட் கொண்டு அழிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மலர்கொடி சீனிவாசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவபாலன் (பாமக), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் (திமுக) ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் நடந்துள்ளது எனக்கூறி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய ஆணையர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுக்கும் மற்றும் சுவாமிமலை காவல் நிலையத்திற்கும் புகார் அளித்தார்.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி சீனிவாசன், "நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவிப் பிரமாணம் எடுத்ததிலிருந்து, துணைத் தலைவர் சிவபாலன் (பாமக), மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்குமார் (திமுக) என்னைப் பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். இது குறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். தான் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதாலும், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பெண் என்பதாலும், தனது புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்கள்" தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்; குரல் மாதிரி பரிசோதனை நிறைவு! - VOICE ANALYSIS ON VENGAI VAYAL CASE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.