ETV Bharat / state

'ஜாம்பஜார் நிஷா'.. பைக் ரைடில் கஞ்சா விற்பனை.. தட்டி தூக்கிய போலீஸ்! - CHENNAI GANJA SALE - CHENNAI GANJA SALE

CHENNAI GANJA SALE: சென்னை திருவல்லிக்கேணியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த ஜாம்பஜார் நிஷா, தனது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார். நிஷா மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாம்பஜார் நிஷா மற்றும் அவரது நண்பர் புகைப்படம்
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாம்பஜார் நிஷா மற்றும் அவரது நண்பர் புகைப்படம் (CREDIT - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 7:43 PM IST

சென்னை: திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், ஐஸ் ஹவுஸ், ராயப்பேட்டை பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. அதன் பேரில், போலீசார் மேற்கண்ட பகுதிகளில் கஞ்சா புழக்கம் இருக்கிறதா என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக ஆண், பெண் இருவர் இருசக்கர வாகனத்தில் சுற்றிக் கொண்டிருந்ததைக் கண்ட போலீசார், அவர்களை மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது, பைக்கில் இருந்த பெண் பிரபல கஞ்சா வியாபாரி நிஷா என்ற ரஹமத் நிஷா (34) என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், ரஹமத் நிஷா தன்னுடன் வந்த ஆண் நண்பர் சையது முஸ்தாக் பாஷாவுடன் சேர்ந்து, அப்பகுதியில் கஞ்சா விற்று வருவது தெரிய வந்துள்ளது. பின்னர், அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ஒன்றே கால் கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம், எடை மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

யார் இந்த ஜாம்பஜார் நிஷா? ஜாம்பஜாரைச் சேர்ந்த நிஷா மீது ஒரு கொலை வழக்கு, போதைப்பொருள் விற்பனை உட்பட ஏழு வழக்குகள் உள்ளன. காவல்துறையினர் நெருக்கடி காரணமாக ஜாம்பஜாரில் இருந்து மடிப்பாக்கத்துக்கு குடியேறிய நிஷா, கஞ்சாவை வாங்கி வந்து பொட்டலம் போட்டு, தனது ஆண் நண்பர் சையது முஸ்தாக் பாஷாவுடன் இருசக்கர வாகனத்தில் வந்து ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

தற்போது கைதான இருவரையும் ஐஸ் ஹவுஸ் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். சென்னை மட்டுமல்லாமல், தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பது, ஆங்காங்கே நடக்கும் கைது சம்பவங்கள் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் வாயிலாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: சென்னை ஐஐடி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் குவிந்த நிதி.. இயக்குனர் காமகோடி பிரத்யேக தகவல்! - IIT Madras Fund

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.