ETV Bharat / state

நெல்லையில் இளம் வயதில் கர்ப்பமாகும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல்..!

Number of teenage pregnancies: நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1488 இளம் மைனர் பெண்களுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளதாகச் சுகாதாரத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

number of teenage pregnancies
நெல்லையில் இளம் வயதில் கர்ப்பமாகும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 9:44 PM IST

திருநெல்வேலி: நமது நாட்டில் அரசு விதிப்படி 18 வயது நிரம்பிய இளம் பெண்கள் திருமண வயதை எட்டியதாகக் கருதப்பட்டாலும், 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிக அளவு பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். இளம் வயதில் குழந்தை பெற்றெடுப்பதால் பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்த விபரங்களைக் கண்டறிய மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், திருநெல்வேலி சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு விண்ணப்பித்த நிலையில் அவர் அளித்துள்ள பதில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, கடந்த 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 1488 18 வயது நிரம்பிய இளம் பெண்களுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளதாகவும், குறிப்பாக அதில் 1101 பிரசவங்கள் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், 347 பிரசவங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல், திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சுமார் 88 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக புறநகர்ப் பகுதியில் உள்ள மானூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 44 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், நெல்லை மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மைனர் இளம் பெண்கள் திருமணம் அதிகரித்துள்ளதன் வெளிப்பாடாக மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1488 இளம் மைனர் பெண்களுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளதாகச் சுகாதாரத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தெரிந்து கொள்ளுங்கள்: கருவுறுதல் பற்றிய கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.