ETV Bharat / state

நீலகிரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை! - TN WEATHER UPDATE - TN WEATHER UPDATE

today weather update: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை தொடர்பான  கோப்புப்படம்
வானிலை தொடர்பான கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 2:49 PM IST

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு நீலகிரி, திருவள்ளூர், தேனி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 5 செ.மீ முதல் 1 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமானநிலையம் 39.2 செல்சியஸ் வெப்பநிலையும்,குறைந்த பட்சமாக ஈரோடு 18.5 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

வானிலை எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதே போல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, , செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறு நாள் (திங்கள்கிழமை) நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஆகஸ்ட் 6 முதல் 9ஆம் தேதி வரை
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:
ஆகஸ்ட் 3 முதல் 7 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

ஆகஸ்ட் 3 முதல் 7 வரை: மத்திய மேற்கு, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு - வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் , தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

ஆகஸ்ட் 3 முதல் 7 வரை: மத்திய மேற்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரப்பகுதி மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 55 கிலோ மீட்டர் வரையிலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: சென்னை டூ காட்பாடிக்கு வந்தே மெட்ரோ ரயில்.. சோதனை ஓட்டம் நிறைவு.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.