ETV Bharat / state

செங்கல் சூளைகள் குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து! - National Green Tribunal

Brick Kiln: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட செங்கல் சூளைக்கான நெறிமுறைகள், புதிதாக தொடங்கும் செங்கல் சூளைகளுக்கு பொருந்தும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

பசுமை தீர்ப்பாயம்
பசுமை தீர்ப்பாயம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 7:20 PM IST

சென்னை: செங்கல் சூளைகள் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள், புதிதாக தொடங்கப்படும் சூளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு செங்கல் சூளைக்கும், மற்றொரு செங்கல் சூளைகளுக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகள் மற்றும் பழத்தோட்டங்களில் இருந்து குறைந்தது 800 மீட்டர் தொலைவில் செங்கல் சூளைகள் இயங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2022ஆம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது.

இந்த வழிகாட்டுதல்கள் புதிதாக தொடங்கப்படும் செங்கல் சூளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கோவை மாவட்டம், தடாகம் பகுதியைச் சேர்ந்த எம்.மாணிக்கராஜ் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2023ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அனுமதித்தால் சட்டவிரோத செங்கல் சூளைகள் எந்த கண்காணிப்பும் இன்றி இயங்க வழிவகுக்கும் எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வழிகாட்டுதல் குறித்த அறிவிக்கையின்படி, செங்கல் சூளைகள் இயக்கம் தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை.. நெல்சன் திட்டவட்டம்! - armstrong murder case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.