ETV Bharat / state

கோவையில் ஒற்றை யானை தாக்கி வயதானவர்கள் காயமடைந்த சம்பவம்; கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்.. - Elephant Movement In Coimbatore

Elephant Movement In Coimbatore: கேரள மாநில எல்லைக்கும் மற்றும் கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கும் உட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு வனத்துறையினர் நேரில் சென்று ஒற்றை ஆண் யானை நடமாட்டம் குறித்து கிராம மக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The Forest Department Awareness The Villagers About The Movement Of A Single Elephant In Coimbatore
Elephant Movement In Coimbatore
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 8:38 PM IST

கோயம்புத்தூர்: கோடைக் காலம் துவங்கும் முன்னரே தமிழகம் முழுவதுமாக வெயில் வாட்டி வதைப்பதால் ஆங்காங்கே கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக யானை உள்ளிட்ட வன விலங்குகள் அருகில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து வருகிறது.

இந்த நிலையில், கேரள மாநில எல்லைக்கும் மற்றும் கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கும் உட்பட்ட எட்டிமடை, கரடி மடை, மாதம்பட்டி உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், ஏராளமான யானைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகிறது.

மேலும், வனப்பகுதியில் வன விலங்குகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் அமைக்கப் பட்டிருந்தாலும் உணவு தேவைக்காக யானைகள் வெளியே வருவது தொடர்ந்து வருகிறது. தற்போது இந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் இந்த யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பை நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த யானைகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இத்தகைய சூழலில், நேற்று (மார்ச்.13) அதிகாலை ஆண் காட்டு யானை ஒன்று கரடிமடை கிராமத்திற்குள் புகுந்துள்ளது.

அப்போது, விஷ்ணு என்பவர் தோட்டத்து வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த பணியாளர் நாகம்மாள் என்ற 70 வயது மூதாட்டி சத்தம் கேட்டு எழுத்து பார்த்தபோது எதிர்பாராத விதமாக அருகில் வந்த ஒற்றை ஆண் காட்டு யானை மூதாட்டி நாகம்மாளை கீழே தள்ளியது. இதில் தலை மற்றும் உடல் பகுதியில் மூதாட்டிக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அங்கிருந்து நகர்ந்த யானை அருகில் இருந்த மற்றொரு தோட்ட வீட்டில் வைத்திருந்த அரிசியை யானை எடுக்க முயன்றபோது அங்கிருந்த வேலையாட்கள் சத்தம் போட்ட போது தனலெட்சுமி (40) என்பவர் யானையால் தாக்கப்பட்டுக் காயமடைந்தார். இந்த நிலையில் இன்று (மார்ச் 14) அதிகாலையில் தீத்திபாளையத்தில் முதியவர் ஒருவரையும் இந்த ஒற்றை ஆண் யானை தாக்கியதில் காயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் தலைமையில், வனப்பகுதியை ஒட்டிய கரடிமடை, மத்திபாளையம், கவுண்டன் பதி, தீத்திபாளையம், மோளப்பாளையம் மற்றும் மூலக்காடுபதி ஆகிய கிராமப் பகுதிகளுக்குச் சென்று ஒற்றை ஆண் யானை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை வழங்கினர்.

மேலும், இந்த பகுதியில் ஒற்றை ஆண் யானை நடமாட்டம் இருப்பதால் வீட்டிற்கு வெளியே, தோட்டத்து வீட்டின் வெளியே மற்றும் திறந்த வெளியில் என யாரும் தங்கவோ அல்லது தூங்கவோ வேண்டாம் என்றும் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்லவேண்டாம் என்றும், தோட்டத்தில் உள்ள வீடுகளில் அரிசி, புண்ணாக்கு, தவுடு மற்றும் கொள்ளு போன்ற உணவுப் பொருள்களை வைப்பதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: தாளவாடிக்கு இன்று முதல் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.