ETV Bharat / state

ஆனி மாத பிரதோஷம்; சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி! - Sathuragiri Hills - SATHURAGIRI HILLS

Sundara Mahalingam Temple: ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு ஜூலை 3 முதல் ஜூலை 6 வரை என 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 4:03 PM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சித்தர்களின் சொர்க்க பூமி என்றழைக்கப்படும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சதுரகிரி கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்ததால், மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களான 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, ஜூலை 3 அன்று முதல் ஜூலை 6 வரை என நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்றும், நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை என்றும், மலைக்கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதியில்லை எனவும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நடிகை கௌதமியின் நில மோசடி புகார்; அழகப்பனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு! - Gautami Land Issue Case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.