ETV Bharat / state

பெண் கேட்டது தப்பா..? பிரியாணி கடை ஊழியர் துடிக்க துடிக்கக் கொலை.. தருமபுரி சம்பவத்தின் பின்னணி! - dharmapuri biryani master murder - DHARMAPURI BIRYANI MASTER MURDER

dharmapuri biryani master murder case: தருமபுரியில் ஹோட்டல் ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைதான நிலையில் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கொலை செய்யப்பட்ட ஆசிப், கைதானவர்கள்
கொலை செய்யப்பட்ட ஆசிப், கைதானவர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 4:46 PM IST

தருமபுரி: தருமபுரி இலக்கியம்பட்டியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையில் தருமபுரி வி.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிக் மாஸ்டராக வேலை செய்து வந்தார். அவரை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

இளைஞரை படுகொலை செய்த சிசிடிவி காட்சி (Credit - ETV Bharat Tamil Nadu)

நெஞ்சை உலுக்கிய கொலை : கொலை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஏசு பாதம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கொலை செய்த நபர்களை பிடிக்க நான்கு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜனரஞ்சன், ஜனப்ரியன் ஆகிய இரட்டை சகோதரர்கள், கௌதம் என்ற இளைஞர் மற்றும் நல்லம்பள்ளி சிவாடிபகுதியைச் சேர்ந்த பரிதிவளவன் ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

கலப்பு திருமண தம்பதி: விசாரணையில் வி.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த முகமது ஆசிக் (கொலை செய்யப்பட்டவர்) சேலத்தில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ கேட்டரிங் படித்தபோது அங்கு படித்த ஜனரஞ்சன், ஜனப்ரியன் ஆகியோரின் சகோதரியை மூன்று ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது. முகமது ஆசிக்கின் தந்தை ஜாவித் மற்றும் அவரது தாய் கலப்பு திருமண தம்பதி என தெரியவந்துள்ளது. முகமது ஆசிக் தாய் வழி உறவினர் தான் ஓமலூர் இரட்டை சகோதரர்களின் சகோதரி என தெரிய வருகிறது.

பெண் கொடுக்க மறுப்பு: உறவினர் என்ற முறையில் இரட்டை சகோதரர்களின் சகோதரி முகமது ஆகிக்கிடம் பழகி வந்துள்ளார். நாளடைவில் காதலாக மாறி மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், முகமது ஆசிக்கிடம் காதலி தனது வீட்டில் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து முகமது ஆசிக்கும் தனது தந்தை தாயுடன் ஓமலூர் சென்று பெண் கேட்டுள்ளனர்.

இதில் பெண் கொடுக்க அவர்கள் மறுத்துள்ளனர். மேலும், வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமண பத்திரிகை வரை சென்றுள்ளது. இதற்கு இரட்டை சகோதரர்களின் சகோதரி மறுப்பு தெரிவித்து வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சகோதரர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிக்கை கொன்றுவிட முடிவெடுத்தனர்.

ஒருவர் சரண்டர்: அதன்படி, கடந்த 26 ஆம் தேதி கார் மூலம் தருமபுரி வந்து முகமது ஆசிக் வேலை செய்யும் ஹோட்டலுக்கு முன்பு நீண்ட நேரம் காத்திருந்து இரவு 9:30 மணி ஆன பிறகு தனது நண்பர்களுடன் சென்று இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜனரஞ்சன். ஜனப்ரியன் ஆகிய இரட்டை சகோதரர்கள், கௌதம் மற்றும் நல்லம்பள்ளி பகுதி சேர்ந்த பருதி வளவன் உள்ளிட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலை தொடர்பாக ராஜ்குமார் என்பவர் இன்று திங்கட்கிழமை தருமபுரி நீதிமன்றத்தில் சரண்டரானார்.

இந்நிலையில், மதம் மாறிய உறவினர் என்பதால் பெண் தர மறுத்தார்களா அல்லது பெண் வீட்டில் வசதி மிகுதி என்பதால் பொருளாதாரம் காதலுக்கு தடையாக இருந்ததா என்ற பல்வேறு கோணங்களில் இக்கொலை சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா போதையில் சிறுவனை கத்தியை வைத்து தாக்கிய சம்பவம்; 3 சிறுவர்கள் அதிரடியாக கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.