ETV Bharat / state

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு; நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு ! - EGMORE CRIMINAL ARBITRATION COURT

தெலுங்கு பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Egmore Criminal Arbitration Court grants conditional bail to actress Kasthuri
நடிகை கஸ்தூரி மற்றும் எழும்பூர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 8:09 PM IST

சென்னை: பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்தன. இதன் விழைவாக, நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அதே வேளையில், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் செய்யப்பட்டது.

இதை அடுத்து, இந்த வழக்குகளிலிருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நடிகை கஸ்தூரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் எழும்பூர் போலீசாரும், மதுரை போலீசாரும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருக்கும் தகவல் எழும்பூர் தனிப்படை போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படியில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் கஸ்தூரியை கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, கஸ்தூரியை கார் மூலம் பகலில் சென்னை அழைத்து வந்து, அவரிடம் சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில், அவரை எழும்பூர் 5வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ரகுபதி ராஜா முன்னிலையில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்.

இதையும் படிங்க: "மாமன்னன் தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம்" - உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

அப்போது நடிகை கஸ்தூரி, "நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவர் ஆதரவு கிடையாது. நான் தலைமறைவாகவில்லை. என்னுடைய சென்னை வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவிப்புக்கு ஆளாகும். எனவே, என்னை சிறையில் அடைக்காமல், ஜாமீனில் விடுதலை செய்யுங்கள்" என வேண்டுகோள் வைத்தார்.

ஆனால், அவருடைய வேண்டுகோளை மாஜிஸ்திரேட்டு நிராகரித்து அவரை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரியின் இந்த ஜாமீன் மனு மாஜிஸ்திரேட்டு தயாளன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஸ்தூரிக்கு 12 வயதில் ஆட்டிசம் பாதித்த மகன் உள்ளார். அவரை கவனித்துக்கொள்ள கஸ்தூரியை தவிர வேறு யாரும் இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிடப்பட்டது.

இதை அடுத்து மாஜிஸ்திரேட்டு தயாளன், நீதிமன்ற மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10.30 மணிக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து, மனிதாபிமான அடிப்படையில் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.