ETV Bharat / state

அண்ணாமலைக்கு பேட்டி கொடுப்பது மட்டும் தான் வேலை, அது தமிழகத்தில் எடுபடாது... ஈபிஎஸ் விமர்சனம்! - lok sabha elections 2024

EPS pollachi campaign: பாஜக மாநில தலைவருக்குப் பேட்டி கொடுப்பது மட்டும் தான் வேலை, அவ்வப்போது பேட்டிகள் கொடுத்து தமிழகத்தில் வாக்குகளைக் கவர முயற்சிக்கிறார். ஆனால் அது தமிழகத்தில் எடுபடாது என பொள்ளாச்சி தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கூறியுள்ளார்.

அண்ணாமலைக்கு பேட்டி கொடுப்பது மட்டும் தான் வேலை, அது தமிழகத்தில் எடுபடாது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 10:48 PM IST

Updated : Apr 10, 2024, 10:59 PM IST

அண்ணாமலைக்கு பேட்டி கொடுப்பது மட்டும் தான் வேலை, அது தமிழகத்தில் எடுபடாது

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் அதிமுக சட்டசபை கொறடா எஸ்பி வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட கட்சி மூர்த்தி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் அலை போல கூடியிருக்கிறது.

பொள்ளாச்சி நகரமே குலுங்குகிற அளவுக்கு மக்கள் வெள்ளம் இங்கே உள்ளது. தேர்தல் பரப்புரை கூட்டம் அல்ல வெற்றி விழா கூட்டம் போல இருக்கிறது. அதிமுக ஒரு வலிமையான இயக்கம், அதிமுக முதல் இடத்தில் இருக்கிறது என்பதற்கு பொள்ளாச்சியில் கூடியிருக்கிற மக்கள் வெள்ளமே சாட்சி.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை பிளவுபடுத்த நினைத்தார்கள். அதிமுகவை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், அதை கட்டி காப்பாற்றியவர் ஜெயலலிதா. இந்த இரு தலைவர்களும் தமிழ்நாட்டு மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள், சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்கிறார்கள். நாம் அனைவரும் எதிரியை ஓட ஓட விரட்டி வெற்றிக்கொடியை நாட்டுவோம். பாஜக மாநில தலைவருக்குப் பேட்டி கொடுப்பது மட்டும் தான் வேலை, அவ்வப்போது பேட்டிகள் கொடுத்து தமிழகத்தில் வாக்குகளைக் கவர முயற்சிக்கிறார். ஆனால் அது தமிழகத்தில் எடுபடாது, இங்கு உழைப்பவர்களுக்கு மட்டும் தான் மரியாதை, உழைக்கின்ற கட்சி, அதிமுக கட்சி.

நன்மை செய்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். தினந்தோறும் பாஜக தலைவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அதனால் மக்களுக்கு என்ன பயன். எப்போது எது தேவையோ, அப்போது அதை சொன்னால் அது மக்களுக்கு நன்மை தரும். அதிமுகவை பொறுத்தவரையில் தொண்டன் முதல் நிர்வாகி வரை நிறைவேற்றக்கூடிய வாக்குறுதியாகக் கொடுப்பார்கள்.

அதை நிறைவேற்றக்கூடிய ஒரே கட்சி அதிமுக கட்சி, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு வாக்குறுதியைக் கொடுத்தார்கள். அவர் இருக்கும் வரை அதை நிறைவேற்றினார்கள், அதனால் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மத்தியில் இருந்து அடிக்கடி தமிழகத்துக்கு வந்து செல்கிறார்கள். அதனால் மக்களுக்கு என்ன பயன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். மக்களுக்குத் தேவையான திட்டத்தைக் கொடுத்து விட்டு வந்தால் தான் மக்கள் நம்புவார்கள். எது சரி, தவறு என்று எடை பார்த்துப் போட்டுத் தீர்ப்பளிக்கக் கூடிய மக்கள் தமிழ்நாட்டு மக்கள். பாஜக ஏமாற்று வேலை தமிழகத்திலே எடுபடாது.

நாங்கள் 30 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி அமைத்து பல்வேறு திட்டங்களைக் கிராம முதல் நகரம் வரை மக்களுக்கு நிறைவேற்றியுள்ளோம். பாஜக தலைவர் நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று பத்திரிக்கை வாயிலாகவும், ஊடகத்தின் வாயிலாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே மிகப்பெரிய திட்டம் ஆனைமலை நல்லாறு திட்டம், அந்தத் திட்டத்தை இவர் நிறைவேற்றித் தருவாராம் எப்படி நிறைவேற்ற முடியும்? அது கேரளா அரசுடன் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை, எனது தலைமையில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிந்து நாங்கள் இருவரும் ஒன்றாகப் பேட்டி அளித்தோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எப்போதும் பாஜக ஆட்சி வருவதற்கு வாய்ப்பே இல்லை, உதாரணம் காவேரி நதிநீர் பிரச்சனை குறித்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அப்போதைய கர்நாடக முதல்வரும் பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் முடிவு எட்டப்படவில்லை, அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து முடிவைப் பெற்றோம்.

காவிரி நதிநீர் பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது, ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு மத்தியில் பாஜக காலதாமதம் செய்தது. நாடாளுமன்றத்தில் காவிரி நதி பிரச்சனை உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தோம்.

ஸ்டாலின் செல்லும் பக்கம் எல்லாம் அதிமுகவின் பத்தாண்டுக் கால ஆட்சி இரண்டு ஆட்சி என்று கூறி வருகிறார். அதிமுகவின் பத்து ஆண்டுகள் ஆட்சி என்னென்ன சாதனை செய்தது என்று மேடையில் நான் பேசுகிறேன், நீங்கள் ஆட்சிக்கு வந்த மூன்றாவது காலத்தில் என்னென்ன திட்டத்தைக் கொண்டுவந்தீர்கள்.

அதனால் மக்கள் எவ்வாறு பயனடைந்தார்கள் என்று நீங்கள் பேசுங்கள், மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பைக் கூறட்டும். நான் சவால் விடுகிறேன், இதற்கு திமுகவிடமிருந்து பதில் இல்லை, அதற்கு பதிலாக என்னை அவதூறாகப் பேசுகிறார்கள். விவசாயியாக இருந்து கஷ்டம், நஷ்டம் என அனைத்தையும் அனுபவித்திருக்கிறேன். சாதாரண கிளைக் கழக செயலாளராக இருந்து இன்று மக்களின் ஆதரவோடு, கழக நிர்வாகிகளின் துணையோடு கழகப் பொதுச் செயலாளராக வாய்ப்பை தந்திருக்கிறார்கள்.

ஸ்டாலினுடைய அப்பா முதலமைச்சராக இருந்தார், திமுக தலைவராக இருந்தார். அதன் மூலமாகத் தான் ஸ்டாலின் எம்எல்ஏ ஆனார், மந்திரி ஆனார், இப்போது முதல்வராக இருக்கிறார். ஸ்டாலின் பேசும்போது எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என கேட்கிறார்.

நான் என்ன செய்தேன் என்று பொள்ளாச்சி வந்து பாருங்கள். பொள்ளாச்சி பகுதி தென்னை விவசாயம் நிறைந்த பகுதி, இங்கு தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். திமுக கட்சி கிடையாது, அது கார்ப்பரேட் கம்பெனி, திமுக என்றால் வாரிசு அரசியல்.

கருணாநிதி வந்தார், அவரது மறைவுக்கு பிறகு ஸ்டாலின் வந்தார், அதற்கு பிறகு உதயநிதி ஸ்டாலினை உள்ளே புகுத்த பார்க்கிறார்கள், ஆனால் முடியவில்லை. உதயநிதி ஸ்டாலின் எங்கு சென்றாலும் ஒற்றை செங்கல்லைத் தூக்கிக் கொண்டு, பேசிக்கொண்டு உள்ளார்.

கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் ஊழல் செய்த ஒரே கட்சி, திமுக. விஞ்ஞான ஊழல் படைத்த கட்சி திமுக. திமுக ஆட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டண உயர்வு என பொதுமக்களை வஞ்சிக்கும் விதமாகச் செயல்படுகிறது. திமுக ஆட்சியில் திருட்டு, வழிப்பறி வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை, கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 39 திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துக் கொண்டிருந்தனர். இவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை ஆகவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என பேசினார்.

இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் மோடி பொதுக்கூட்டத்தில் நமீதாவிற்கு அனுமதி மறுப்பா? போலீசாருடன் வாக்குவாதம்! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 10, 2024, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.