ETV Bharat / state

ஜாபர் சாதிக் விவகாரம்; ஹவாலா தரகரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன்! - jaffer sadiq drug case update - JAFFER SADIQ DRUG CASE UPDATE

Jaffer Sadiq issue: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் வலதுகரகமாக செயல்பட்டு வருவதாக அறியப்படும் ஹவாலா பணம் மாற்றித் தரும் தரகரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜாபர் சாதிக்கின் வலது கரமாக செயல்பட்டு வந்த ஹவாலா புரோக்கரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 6:35 PM IST

சென்னை: டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உட்பட ஐந்து பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு உணவுப் பொட்டலங்கள் என்ற பெயரில் பல கோடி மதிப்புடைய போதைப்பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் நடந்திருக்கலாம் எனக் கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் அவருடைய நண்பர் தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் மற்றும் தொழில் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் ஹவாலா பணத்தை மாற்றிக் கொடுக்கும் பணியில் ஹவாலா தரகர் ஒருவர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டிருப்பதும், அங்கிருந்து கிடைக்கக்கூடிய ஹவாலா பணத்தை சென்னை மண்ணடி பகுதியில் இருக்கும் தரகர் ஒருவர் ஜாபர் சாதிக்கிற்கு மாற்றிக் கொடுத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த நபருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து வரும் ஹவாலா பணத்தை இந்த நபர் எப்படி மாற்றிக் கொடுத்தார்? இதில் ஏதேனும் குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், ஜாபர் சாதிக்கிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் ஆடியோக்களில் இவர் பல்வேறு ஹவாலா பணம் மாற்றும் தரகர்களிடம் பேசி இருப்பது தெரிய வந்ததை அடுத்து, இந்த நபரிடமும் ஜாபர் சாதிக் தொடர்பில் இருந்தாரா என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் மூலம் ரூ.40 கோடி சம்பாதித்த ஜாஃபர் சாதிக்: அமலாக்கத்துறை தகவல்! - Jaffer Sadiq Drug Case Update

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.