ETV Bharat / state

சென்னையில் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை! - chennai news

DVAC raid in Chennai:சென்னையில் கட்டுமான நிறுவனங்களுக்குத் தொடர்புடைய ஐந்து இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

anti corruption department
லஞ்ச ஒழிப்புத்துறை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 7:30 PM IST

சென்னை: சென்னையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டுமான நிறுவனங்கள் 50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய ஐந்து இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு கட்டுமான தொழிலதிபர் லஞ்சம் கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில், அப்போதைய ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரை இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பின்னிமில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு, இரண்டு கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. இதையடுத்து, அந்த இடத்தின் அருகே ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை அகற்றுவதற்காக லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக லேண்ட் மார்க் ஹவுசிங் ப்ராஜெக்ட் என்ற நிறுவனத்தில், இதற்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, சில ஆவணங்களைக் கைப்பற்றினர். அப்போது அந்த விசாரணையில், யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்களின் பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர், இது தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடங்கிய நிலையில், தற்போது இது குறித்து 2 கட்டுமான நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதில் லஞ்சம் கொடுத்ததாக கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குநர் உதயகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட கே.எல்.பி நிறுவன இயக்குனர் சுனில் கேட்பாளியா மற்றும் மனிஷ் ஃபார்மர் என சுமார் 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பின்னி மில் நிறுவனத்திடம் இருந்து 14.16 ஏக்கர் நிலத்தை வாங்கியபோது, ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்வதற்கு 50 கோடி லஞ்சப் பணம் கை மாறி இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அதில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய பட்டியலும் சேர்த்துள்ளது.

அது தொடர்பாக இன்று காலை முதல் கட்டுமான நிறுவனங்களுக்குத் தொடர்புடைய ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி இருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“எம்ஜிஆர் போட்ட பிச்சை.. அண்ணாவை ஆட்சியில் அமர வைத்தது யார்?” - கே.சி.வீரமணி கடும் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.