ETV Bharat / state

கிணற்றில் தவறிய ஒருவர்; அதை பார்க்கச் சென்ற பெண்ணும் தவறிய சோகம்! - DHARMAPURI WELL DEATH

தருமபுரி காரிமங்கலம் அருகே கிணறு வெட்டும் போது தொழிலாளி மண் சரிந்து விழுந்து உயிரிழந்ததை தொடர்ந்து, கிணற்றை எட்டி பார்த்த பெண்ணும் அதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழ்ந்த பச்சியப்பன், முருகம்மாள், ஆழப்படுத்தப்பட இருந்த கிணறு
உயிரிழ்ந்த பச்சியப்பன், முருகம்மாள், ஆழப்படுத்தப்பட இருந்த கிணறு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 3:06 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அடுத்தடுத்து இருவர் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கணேசனுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், 60 அடி ஆழமுள்ள கிணறு ஒன்றுள்ளது. கணேசன் அந்த கிணற்றை ஆழப்படுத்தும் பணிக்காக கீரியூர் பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (50), என்பவரை அழைத்து பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது வெடி வைத்ததாக தெரிகிறது. அந்த வெடி வெடித்த தாக்கத்தால் கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் மண் சரிந்ததுள்ளது. அதை அப்புறப்படுத்த முயன்ற பச்சியப்பன் எதிர்பாராத விதமாக மேலும் மண் சரிந்ததில் மண்சரிவில் சிக்கியுள்ளார். உடனடியாக மற்ற தொழிலாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் பச்சியப்பனை மீட்ட நிலையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பக்கத்து விவசாய தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் பச்சியப்பனை காண விரைந்து வந்து பச்சியப்பன் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் நின்றிருந்துள்ளனர். அதில் விருதானூர் பகுதியைச் சேர்ந்த முருகம்மாள் (51) தவறி கிணற்றுக்குள் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: நெல்லையில் இளைஞர் படுகொலை....சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை!

பின், இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர் ஒருவர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில் அதை பார்க்கச் சென்ற பெண் ஒருவரும் அதே கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.