ETV Bharat / state

மதுரையை சுற்றி இம்புட்டு பொக்கிஷமா? - மக்களை ஈர்க்கும் மதுரை கலைக்கூடம் புகைப்பட கண்காட்சி - Maa Madurai Vizha - MAA MADURAI VIZHA

MAA MADURAI VIZHA: கி.மு.3-ஆம் நூற்றாண்டு தொடங்கி தற்போது வரை மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் இருக்கும் தமிழி எழுத்துக்களையும், பண்டைய காலந்தொட்டு பின்பற்றப்பட்டு வரும் கலை, கலாச்சார, பண்பாட்டுத் தொடர்ச்சியையும் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாமதுரை விழா நிகழ்வின் பகுதியாக பொதுமக்களை ஈர்த்து வரும் மதுரை பற்றிய புகைப்படக் கலைக்கூடம் மாணவ, மாணவியரை, பொதுமக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

மதுரை கலைக்கூடம் புகைப்பட கண்காட்சி
மதுரை கலைக்கூடம் புகைப்பட கண்காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 4:26 PM IST

மதுரை: மதுரையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவோடு 'யங் இந்தியன்ஸ்' 'சிஐஐ' உள்ளிட்ட பல்வேறு தனியார் அமைப்புகளின் பங்களிப்போடு 'மாமதுரை விழா' நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக இந்நிகழ்வை தமுக்கம் மாநாட்டு கூட்ட அரங்கில் துவங்கி வைத்தார்.

புகைப்பட கண்காட்சி குறித்து பார்வையாளர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிகழ்வில், தொல்லியல் பயணம், மதுரை கலைத் திருவிழா, இரட்டை அடுக்கு பேருந்துப் பயணம், பலூன் திருவிழா, உணவுத் திருவிழா, விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், தமுக்கத்தில் மதுரையின் பழமையைப் பறைசாற்றும் வண்ணம் 'மதுரை கலைக்கூடம்' எனும் பெயரில் புகைப்படக் கண்காட்சி இடம் பெற்றுள்ளது.

"தமிழ் வரலாற்றில் இரண்டு நகரங்கள் மட்டுமே 2 ஆயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டதாகும். ஒன்று பூம்புகார், மற்றொன்று மதுரை" என வரலாற்றை முன்வைக்கிறார் இக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக பாறை ஓவியங்கள் குறித்த ஆய்வாளருமான காந்திராஜன். மேலும், கண்காட்சியினை குறித்து அவர் கூறுகையில், "பூம்புகார் அழிந்து அதன் எச்சங்கள் மட்டுமே மிஞ்சியுள்ள நிலையில், மதுரை மட்டுமே தனிச்சிறப்பு மிக்கதாய் திகழ்கிறது.

தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில், பூம்புகாரையும், மதுரையையும் மட்டுமே தனது பாடல்களில் போற்றி மகிழ்கிறது. மதுரையைச் சுற்றியுள்ள தமிழிக் கல்வெட்டுகள் அதன் பண்டைய பெருமையையும் உயர்வையும் தெளிவாகக் காட்டுகின்றன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட மலைகளை உடையதாக உலகிலேயே மதுரை மட்டுமே திகழ்கிறது.

அதனை முன்னிட்டு, மாமதுரை நிகழ்வில் மதுரையின் பழமையை உணர்த்தும் வகையில் மதுரை கலைக்கூடம் எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைத்துள்ளோம். மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் காணப்படும் தமிழி எழுத்துக்கள் மட்டுமன்றி, இங்குள்ள பழமையான கோயில்கள், சிற்பங்கள், பிரிட்டிஷ் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்கள், கலித்தொகை வர்ணிக்கும் ஏறுதழுவுதல் என அனைத்தையும் காட்சிப்படுத்தியுள்ளோம். மதுரையின் மொத்த பழமையையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் அனைவரும் கண்டு களிக்க முடியும்" என்றார்.

மதுரையைச் சேர்ந்த உசேன் கூறுகையில், "இங்கு அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, மதுரையின் பாரம்பரியத்தை விளக்குவதாக உள்ளது. உலகின் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழின் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய எழுத்து வடிவத்தையும் இங்கு கண்டு மகிழ்ந்தோம். மக்கள் வாழக்கூடிய மிகப் பழமையான நகரங்களுள் மதுரையும் ஒன்று.

வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் எல்லாம் மிகவும் வியப்பைத் தருகின்றன. 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய விசயங்கள் தொடங்கி கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பதிவுகள் வரை இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

கல்லூரி மாணவர் மோகன மாணிக்கதாசன் கூறுகையில், "மதுரையைப் பற்றிய இந்தக் கலைக்கூடத்தைப் பார்வையிடும்போது ஒரு தமிழனாக மிகவும் பெருமித உணர்வு ஏற்படுகிறது. உலகத்தின் முதன் மொழியாகக் கருதப்படுகின்றன நமது தமிழைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. சிற்பங்கள், பாறை ஓவியங்கள் மற்றும் கலையிலிருந்து விளையும் நெல் வரை நமது பாரம்பரியப் பெருமையை இங்க காட்சிப்படுத்தியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த அனைவரும் இதனைப் பார்வையிட வேண்டும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வியக்க வைக்கும் தமிழரின் வானியல் அறிவு.. வெளிவரும் 3000 ஆண்டு கால வரலாறு..! - Kalayarkoil stone inscriptions

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.