ETV Bharat / state

தஞ்சை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்! - Thanjavur SEXUAL ASSAULT CASE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 3:15 PM IST

Orathanadu sexual assault case: தஞ்சாவூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏன் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது? சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் யார்? என்பது குறித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோப்பு படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 வயது இளம் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த 25, 27, 20 வயதுடைய இளைஞர்கள் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்ற போது, அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி என்.அழகேசன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் யார்?, மருத்துவமனையில் அன்றைய தினம் பணியில் இருந்த மருத்துவர் யார்?, அவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யக்கூடாது?, ஏன் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது என்பதை நீதிமன்றத்தில் உடனடியாக வரும் 27ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் இரட்டை கொலை: கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெறிச்செயல்! - Tirunelveli double murder

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.