ETV Bharat / state

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது கோவை போலீசில் புகார்.. பின்னணி என்ன? - PAWAN KALYAN CASE

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மீது கோவை மாநகர காவல்துறையில், திராவிட தமிழர் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான வெண்மணி புகார் அளித்துள்ளார்.

பவன் கல்யாண் மற்றும் வழக்கறிஞர் வெண்மணி
பவன் கல்யாண் மற்றும் வழக்கறிஞர் வெண்மணி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 4:02 PM IST

கோயம்புத்தூர்: திராவிட தமிழர் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான வெண்மணி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் "ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதியில் தமிழர்கள் மத்தியில் பேசும்போது, 'தமிழகத்தில் இந்து மதத்தைப் பற்றி இழிவாக பேசுகிறார்கள். அவர்களுக்கு எதிராக ஏன் கொந்தளிக்கக் கூடாது' என பேசியது அதிர்ச்சி அளிக்கிறது.

இது மதக்கலவரத்தை தூண்டுவது போல் உள்ளது. அதேபோல் மாட்டு கொழுப்பு குறித்தும் பேசி உள்ளது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை இழிவு படுத்துவது போல் உள்ளது. எனவே அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெண்மணி, "நடிகரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கி பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும், மதக்கலவரத்தையும் தூண்டும் விதமாகவும் பேசி வருகிறார். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும், திருப்பதியில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு தடவியதால், தீட்டு பட்டுவிட்டது என தொடர் பிரச்சாரத்தைச் செய்து கொண்டு இருக்கிறார். இது காலகாலமாக மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்பவர்களையும், தலித்துகளையும் சாதி ரீதியாக இழிவுபடுத்தும் செயலாகும்" என்றார்.

இதையும் படிங்க: வேங்கை வயல் விவகாரம் - திமுக அரசு மீது அம்பேத்கர் மக்கள் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு!

"மேலும் நான் பிறந்ததிலிருந்தே மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்பதால், பவன் கல்யாண் பேச்சு எனக்கு பெரும் அவமானத்தையும், இழிவையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக துணை முதல்வர் உதயநிதி, அம்பேத்கர் சொன்ன வருணாசிரம சனாதனக் கட்டமைப்பு ஒழிப்பு குறித்தும் பேசியுள்ளார்.

அரசியல் சட்டத்தின் நோக்கமும் சமத்துவம் மற்றும் சமூகம் தான். ஆனால் நடிகர் பவன் கல்யாண் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றபோதும், துணை முதலமைச்சராக பதிவியேற்ற போதும் எடுத்துக் கொண்ட இரகசிய காப்பு பிரமாணத்தை மீறி சமய சார்புடன் நடந்து கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.

இந்திய குற்றவியல் சட்டங்களின்படி கிரிமினல் குற்றம் குறித்து தகவல் தெரிந்த எந்த ஒரு நபரும் காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்ற அடிப்படையில் பவன் கல்யாண் மீது புகார் அளிக்கிறேன். உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை.

திருப்பதி லட்டு பிரச்சனை எவ்வித தொடர்பும் இல்லாத, தலித் மற்றும் சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக வன்மத்தைப் பரப்பி சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் விதமாக பேசியும், தமிழ்நாட்டின் துணை முதல்வரை ஒருமையில் பேசி, இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் விதமாகப் பேசி வரும் பவன்கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.