ETV Bharat / state

உங்களைத் தேடி உங்கள் ஊரில்: தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியர் ஆய்வு..! அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி! - தருமபுரி ஆட்சியர் ஆய்வு

Dharmapuri Collector Shanti IAS: தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று (ஜன.31) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Dharmapuri Collector Inspection
தருமபுரி ஆட்சியர் ஆய்வு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 11:00 PM IST

தருமபுரி ஆட்சியர் ஆய்வு

தருமபுரி: 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புது ரெட்டியூர் பகுதியில் புதியதாக ரூ.14 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த பணிகளைப் பார்வையிடச் சென்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, அங்கு பூங்கா அமைக்க எந்த விதமான பணியும் தொடங்காததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து, "டெண்டர் விடப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் ஏன் பணிகள் தொடங்கவில்லை? நாளைக்குள் பூங்கா அமைக்கும் பணியை தொடங்கவில்லை என்றால் நீங்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவீர்கள்" என்று பேரூராட்சி செயல் அலுவலருக்கு எச்சரிக்கை விடுத்தார் மாவட்ட ஆட்சியர் சாந்தி.

இதன் தொடர்ச்சியாக, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பெ.மல்லாபுரம் பேரூராட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை ஆய்வு செய்தார். அப்போது அந்த பூங்காவின் அருகில் செயல்பட்டு வரும் அரவை ஆலையில் இருந்து சத்தம் அதிகமாக வந்துள்ளது.

இதனை அடுத்து, சத்தம் அதிகமாக இருக்கும் இடத்தில் ஏன் பூங்காவை அமைத்தீர்கள்? எப்படி குழந்தைகள் விளையாடுவார்கள்? என்று கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சியர் சாந்தி, பூங்கா பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக இருப்பதை உடனடியாக சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சுங்கரஹள்ளி பகுதியில் மாவட்ட ஆட்சியர் செல்லும் பொழுது அங்கிருந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளதாகவும் சாலையைக் கடந்து சென்று தான் தண்ணீர் எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பிரச்சனையை வலியுறுத்தினர். அப்போது, மக்களுக்குக் கொடுக்கத் தானே திட்டம் இந்த மக்களைப் பார்த்தால் உங்களுக்கு மக்களாகத் தெரியவில்லையா? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, மழுப்பலாக அதிகாரிகள் பதில் அளிப்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர், தான் பாப்பிரெட்டி பட்டியில் தங்க இருப்பதாகவும் நாளைக்குள் இப்பகுதி மக்களுக்குத் தண்ணீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளைக் கண்டித்தார். தொடர்ச்சியாக போதகாடு பகுதியில் அரசுப் பள்ளியை ஆய்வு செய்தார்.

அப்போது, அப்பள்ளியில் உள்ள ஆசிரியர் தன் சொந்த செலவில் பள்ளி சுற்றுச்சுவர்களை வண்ண ஓவியங்களால் அலங்கரித்து வைத்திருந்தார் இதனை ஆர்வத்துடன் மாவட்ட ஆட்சியர் பார்த்து இதே போன்று மற்ற பள்ளிகளும் செயல்படுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: விஜய் தொடங்கும் கட்சி பெயர் என்ன? - தருமபுரியில் ரசிகர்களின் போஸ்டர் வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.