ETV Bharat / state

சிறுத்தை நடமாட்டம்: மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியிலுள்ள 9 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! - Leopard issue SCHOOLS Leave

Leopard Issue Schools Leave: மயிலாடுதுறை மாவட்டம், ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதையொட்டி நாளை (ஏப்.5) 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Leopard
Leopard
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 10:49 PM IST

Updated : Apr 4, 2024, 10:55 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதையொட்டி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு காரணமாக மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி, மறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல், கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய 9 பள்ளிகளுக்கு நாளை (05.04.2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிப்பதற்கு வனத்துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை ஆகிய துறைகளின் மூலம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இச்சிறுத்தை பிடிக்கப்படும். பொதுமக்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்கப்படும். ஆதலால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் நினைவில் நிற்கக்கூடிய திட்டம் என எதுவும் இல்லை" - பா.சிதம்பரம்! - Lok Sabha Election 2024

Last Updated : Apr 4, 2024, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.