ETV Bharat / state

"தனியார் வேலைக்கு பரிந்துரை கடிதம்" - கோவை வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் சர்ச்சை பேச்சு - CV GANESAN IN EMPLOYMENT CAMP - CV GANESAN IN EMPLOYMENT CAMP

கோயம்புத்தூர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பணி நியமன ஆணைகள் வழக்கும் விழா நடைபெற்றது.

பணிநியமன ஆணை வழங்கும் அமைச்சர் சி.வி.கணேசன்
பணிநியமன ஆணை வழங்கும் அமைச்சர் சி.வி.கணேசன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 10:37 PM IST

கோயம்புத்தூர்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கல்லூரியில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பணிநியமன ஆணைகள் வழக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், "முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் 238 வேலை வாய்ப்பு முகாம் நடத்தி இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறோம். ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு பல்வேறு தொழில் முதலீடுகள், நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

5 லட்சம் பேருக்கு மேலாக தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை மொத்தமாக உருவாக்கி இருக்கிறோம். அரசு துறைகளில் நிரப்பபடாமல் இருக்கும் 75 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முதல்வர் திட்டமிட்டு இருக்கிறார். முதன் முதலில் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் உதயநிதி தொகுதியில் துவக்கி வைக்கப்பட்டது.

அப்பொழுது எனக்கு வேலை வாய்ப்பு முகாம் என்றால் என்ன என்று கூட தெரியாது. அவருடன் சென்று தான் வேலை வாய்ப்பு முகாம்கள் குறித்து தெரிந்து கொண்டேன். தொழிலாளர் நலத்துறை ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டு முயற்சியுடன் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: நாளாக தொடரும் ஊழியர்கள் போராட்டம்.. "பண்டிகை நேரத்தில் இப்படியா" - கடுப்பான சாம்சங் நிர்வாகம்!

யாருக்காவது வேலைக்காக எம்.பி பரிந்துரை சொன்னால் நான் ஏதாவது ஒரு பிரபல நிறுவனங்களுக்கு கடிதம் கொடுப்பேன். ஆனால் அந்த கடிதம் நிறுவனத்தின் கேட்டை விட்டு உள்ளே போகாது. கடைசியில் அந்த கடிதம் அதிகாரிகளுக்கு போய் சேரவே சேராது. பின் கடிதம் வாங்கியவர்கள் படாத பாடு பட்டு விடுவார்கள்.

வேலை கிடைத்தாலும் இரண்டாவது பட்சமாக சம்பளம் பத்தவில்லை என்ற குறைவருகிறது. இதையெல்லாம் நீக்குவதற்காக வேலைவாய்ப்பு முகாம்கள் உருவாக்கி பயன்பெற செய்து இருக்கிறோம். வேலை இல்லை என்பதை போக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து முதலீடு ஈர்க்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மூடப்பட்ட போர்டு நிறுவனத்தை மீண்டும் திறக்க வைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடுமையாக யார் முயற்சிக்கிறார்களோ அவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்" என்றார்.

இதையடுத்து சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் கிளம்பிச் சென்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.