ETV Bharat / state

மதிமுக, விசிக, புதிய தமிழகம் சின்னம் விவகாரம்: சத்யபிரதா சாகுவின் விளக்கம் என்ன? - chief election commissioner - CHIEF ELECTION COMMISSIONER

Chief Election Commissioner: மதிமுக, விசிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிகாரபூர்வமாக சின்னம் இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்னும் ஒதுக்கபடவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சாகு விளக்கம் அளித்துள்ளார்.

Chief Election Commissioner sathya pratha sahoo
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 3:26 PM IST

Updated : Mar 25, 2024, 3:52 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, புதிய வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டுமென்ற விளக்க விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி குறித்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும், 2 கோடி வீடுகளுக்கு இந்த மாத இறுதியில் வாக்களிப்பது எப்படி என்ற விளக்கக் கையேடு, தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வீடுகளுக்கே சென்று அளிக்க இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக 25 கம்பெனி துணை ராணுவம் வந்துள்ள நிலையில், கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவம் விரைவில் வர உள்ளதாகவும், மொத்தமாக 190 கம்பெனி துணை ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் 453 நட்சத்திர பேச்சாளர்களுக்குப் பிரச்சார அனுமதி அட்டை வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மதிமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்குச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான உத்தரவு, இதுவரை இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து வரவில்லை. 'சி-விஜில்' செயலி மூலம் இதுவரை 11 ஆயிரத்து 305 புகார்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்களிடம் இருந்து 17 ஆயிரத்து 800 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளதாகவும், 85 வயதுடையோருக்கு வீடு வீடாகச் சென்று வாக்களிக்கும் படிவம் வழங்குதல் இன்று மாலையுடன் நிறைவடைவதாகவும், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: நெல்லை, மயிலாடுதுறைக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது? - செல்வப்பெருந்தகை அளித்த விளக்கம் - Selvaperunthagai

Last Updated : Mar 25, 2024, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.