ETV Bharat / state

சென்னை சாலைகளில் சீறிப் பாய்ந்த ஃபார்முலா கார்கள்.. வெற்றி பெற்றவர்கள் யார்? முழு விவரம்! - Formula 4 night street race

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 2, 2024, 10:41 AM IST

ஃபார்முலா இந்தியன் ரேஸில் வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் நடிகர் நாக சைதன்யா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை தீவுத்திடலில் இரவு நேர பார்முலா போர் ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று F4 இந்தியன் ரேஸ் (JK FL GP 4 ), இந்தியன் ரேசிங் லீக் (Indian racing league) மற்றும் ஜேகே எஃப்எல் ஜிபி 4(Formula 4 Indian Race) என மூன்று வகை போட்டிகள் நடைபெற்றது.

F4 இந்தியன் ரேஸ்

  • ஜேகே எஃப்எல் ஜிபி 4 பிரிவில் முதல் ரேஸில் டில்ஜித் என்ற டார்க் டான் அணியை சேர்ந்த வீரர் முதல் இடத்தை பிடித்தார். மொத்தம் எட்டு லேப்ஸ்களை கடப்பதற்கான இந்த போட்டியில், பாதியிலேயே விபத்தின் காரணமாக பந்தயம் நிறுத்தப்பட்டது. இதில் கடைசி வரை முன்னிலையிலிருந்த டார்க் டான் அணியை சேர்ந்த டில்ஜித் முதலிடத்தில் பிடித்தார்.

இந்தியன் ரேசிங் லீக் 1, 2

  • இந்தியன் ரேசிங் லீக் முதல் ரேசில், கோவாவை சேர்ந்த ஹய்முன் முதலிடத்தை பிடித்தார். அதே மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை கேப்ரியல் ஜெய்கோவாவும் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
  • இந்தியன் ரேசிங் லீக் இரண்டாவது ரேஸில் போர்ச்சுகல் நாட்டை சார்ந்த டெல்லி அணி வீரர் ஆல்வெரோ முதலிடத்தை, கோவாவைச் சேர்ந்த சுனில் ஷாவு 2வது இடத்தையும் பிடித்தனர். 3வது இடத்தை பெங்களூரு அணியை சார்ந்த இந்திய வீரர் ரிஷான் ராஜுவும் பிடித்தார்.

ஜேகே எஃப்எல் ஜிபி 4

  • ஃபார்முலா 4 இந்தியன் ரேஸில் முதல் பந்தயத்தில் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த கொச்சி வீரர் பார்டர் முதலிடத்தையும், இந்தியாவை சேர்ந்த பெங்கால் வீதத் ருஹான் அல்வா 2வது இடத்தையும், அபை மோஹன் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். தொடர்ந்து போட்டிகளுக்கு இடையே தமிழ்நாடு மகளிர் பைக் அணியின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அமைச்சர் உதயநிதி வாழ்த்து: ஃபார்முலா ரேஸில் வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹைதராபாத் அணியின் உரிமையாளரும், நடிகருமான நாக சைதன்யா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹைதராபாத் அணியின் அலிபாய் முதலிடத்தையும், அகமதாபாத் அணியின் திவி நந்தன் இரண்டாவது இடத்தையும், ஜேடன் பாரியர்ட் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

இதனிடையே இரவு நேர கார் பந்தயப் போட்டியை காண்பதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான கங்குலி, தவிர ஜான் ஆபிரகாம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து போட்டியைக் கண்டு ரசித்தனர்.

இரவு நேர ஸ்வீட் சர்க்யூட்டில் வீரர்களின் கார்கள் சீறி பாய்ந்து செல்லும் காட்சிகள் ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைத்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் இந்த போட்டியை கண்டு ரசித்தனர். குறிப்பாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணியை சேர்ந்த 100 மாணவர்கள் இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியாவுடன் காதலா? சர்ச்சையை கிளப்பும் பாலிவுட் நடிகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.