ETV Bharat / state

மகாவீர் ஜெயந்தி: சென்னையில் நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவு! - Mahavir Jayanti Festival

Mahavir Jayanti Festival: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் நாளை இறைச்சி கூடங்கள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 1:20 PM IST

Updated : Apr 20, 2024, 4:02 PM IST

சென்னை: மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைபிடிக்க கொண்டாடப்படும் இந்த மாவீரர் ஜெயந்தி, இந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி (நாளை) வருகிறது. இந்த நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி நாளை இறைச்சி கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் நாளை அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல், ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு, இறைச்சி விற்பனை செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே, இந்த உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் நாளைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மஹாவீர் ஜெயந்தி தினம் அன்றும், மே தினம் (1ஆம் தேதி) அன்றும், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் கண்டிப்பாக மூடப்பட்டு, மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்படுகிறது.

மேலும், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளைச் சார்ந்த பார்கள், கிளப்களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் என அனைத்தும் மஹாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினம் ஆகிய நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்டு, மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபானம் விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக சின்னத்தில் லைட் எரிந்ததா? சென்னை வாக்குச்சாவடியில் நடந்தது என்ன? - Lok Sabha Election 2024

Last Updated : Apr 20, 2024, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.