ETV Bharat / state

விரைவில் இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்.. மத்திய அரசு ஐகோர்ட்டில் தகவல்! - fisherman attack by SL navy - FISHERMAN ATTACK BY SL NAVY

India-Sri Lanka Joint Action Committee: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளதாக மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 10:10 PM IST

சென்னை: கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 22ஆம் தேதி கைது செய்தனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருவதாகவும், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முயன்றபோது படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்துள்ளதாகவும், அதனால் இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், மீனவர்கள் கைது சம்பவங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் அவ்வப்போது விடுவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண, இரு நாட்டு செயலாளர்கள் மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு விரைவில் கூட்டம் கூடி, இது சம்பந்தமாக விவாதிக்க உள்ளதாகவும் விளக்கமளித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் வாதத்தைப் பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “மத்திய அரசு மாநில சுயாட்சியை கலைக்கப் பார்க்கிறது” - பொன்முடி பேச்சு! - Minister Ponmudi on Constitution

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.