ETV Bharat / state

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்.. மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை - NEET ACADEMY STUDENTS ATTACK

திருநெல்வேலி நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பு மற்றும் காலணியால் தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

மாணவர்கள் தாக்கப்படும் காட்சி
மாணவர்கள் தாக்கப்படும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 5:14 PM IST

திருநெல்வேலி: மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கபட்டதை தொடர்ந்து, மாணவர்கள் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை அதிகரித்துள்ளது. எப்படியாவது மருத்துவராகி விட வேண்டும் என்பதற்காக, நடுத்தர வர்க்கம் முதல் வசதி படைத்தவர்கள் என அனைவரும் தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் என்பவர் பிரபல பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றிய நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ஒரு நீட் பயிற்சி மையத்தை உருவாக்கி உள்ளார். இந்த பயிற்சி மையத்தில் படித்த 12 பேருக்கு கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளதாக விளம்பரம் செய்துள்ளார்.

மாணவர்கள் தாக்கப்படும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதன் காரணமாக, அதிக அளவிலான மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். இந்த பயிற்சி மையத்தில் சராசரியாக 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பயிற்சி மையம் சார்பாக ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, கேரளாவைச் சேர்ந்த மாணவர்களும் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருவதாகவும், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதற்காக தினம்தினம் தேர்வு 12 மணி நேரத்திற்கு மேல் பயிற்சி என மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்'.. தனது பேச்சுக்கு காவல் ஆணையர் அருண் விளக்கம்!

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சி மையத்தில் காலை நடந்த தேர்வு முடிந்து, மற்றொரு ஆசிரியர் வருவதற்கு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தின் உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதனால் மாணவர்களுக்கு கை, கால், முதுகு உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இந்த பயிற்சி மையம் இரண்டாம் தளத்தில் அமைந்திருப்பதால், பயிற்சி மையத்திற்கு வரக்கூடிய மாணவர்கள் பயிற்சி மைய வாசலிலேயே காலனியை விட்டு விட்டு வர வேண்டும். அதற்கென பெண்களுக்கு தனி பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், காலணியை முறையாக அடுக்கவில்லை என்பதற்காக பயிற்சியாளர் மாணவி மீது காலணியை தூக்கி வீசியுள்ளார்.

இந்த நிலையில் மாணவர்களை பிரம்பால் தாக்குவது, மாணவி மீது காலணியை தூக்கி எறிவது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத அந்த நபர், மாணவர்களை தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகளை ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் காவல்துறை சி.எஸ்.ஆர் பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பயிற்சி மைய உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கும் இது தொடர்பாக புகார் சென்ற நிலையில், அவர்களும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது இந்த நீட் பயிற்சி மையத்தில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.