ETV Bharat / state

முடிவுக்கு வருகிறதா ஜெயக்குமார் வழக்கு? ஒரே நாளில் உயர் அதிகாரிகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு! - Jayakumar death case - JAYAKUMAR DEATH CASE

Jayakumar death case: நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கை விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை சிபிசிஐடி காவல்துறை அலுவலகம், மறைந்த ஜெயக்குமார்
நெல்லை சிபிசிஐடி காவல்துறை அலுவலகம், மறைந்த ஜெயக்குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 8:01 PM IST

திருநெல்வேலி: காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார், ஜெயக்குமார் உடல் கைப்பற்றப்பட்ட கரைசுத்துபுதூர் பகுதிக்கு நேரில் சென்று பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.

முன்னதாக, சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஏற்கனவே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஜெயக்குமார் குடும்பத்தினர் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிபிசிஐடி எஸ்பி முத்தரசி இன்று (வியாழக்கிழமை) நெல்லைக்கு வந்தார். பின்னர், பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி ஆய்வாளர் உலக ராணி உள்ளிட்ட காவல்துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், சிபிசிஐடி காவல்துறையின் ஏடிஜிபி வெங்கட்ராமன் மற்றும் ஐஜி அன்பு ஆகியோரும், இன்று ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள நெல்லை வர உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், சிபிசிஐடி காவல்துறையின் உயர் அதிகாரிகள் மூன்று பேரும் ஒரே நாளில் நெல்லையில் முகாமிடுகின்றனர்.

இதனிடையே, ஜெயக்குமார் உடல் எடுக்கப்பட்ட கரைசுத்துபுதூர் தோட்டத்தில் சிபிசிஐடி காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர். ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக ஏற்கனவே நெல்லை மாவட்ட போலீசார் 10 தனிப்படைகள் அமைத்து விசாரித்தும் துப்பு துலங்காத நிலையில், சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கஞ்சா படுத்திய பாடு.. மகனை உலக்கையால் அடித்துக் கொன்ற பெற்றோர்.. சாத்தூரில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.