ETV Bharat / state

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் சாத்தியமற்றது.. அண்ணாமலை கூறும் காரணம் என்ன? - Annamalai comment Hosur airport

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 4:01 PM IST

Annamalai about Hosur International airport: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சாத்தியமற்றது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Photo credits - Annamalai 'X' page, ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அப்போது, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

குறிப்பாக, "ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதனை இந்த மாமன்றத்தில் நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' எனக் கூறினார். இந்நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அது தொடர்பாக தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில், "கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், ஓசூர் விமான நிலையம் குறித்து கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் V.K.சிங் தெளிவாக பதிலளித்துள்ளார்.

இந்திய அரசு மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு 150 கி.மீ சுற்றளவில் புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்று கூறினார்.

ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம் TAAL என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தை பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியிருந்தார்.

மேலும், மத்திய விமானப் போக்குவரத்து துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார். அத்துடன், தமிழக அரசு TAAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஏற்கனவே, கடந்த 2022ஆம் ஆண்டு, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7 ஆயிரத்து 200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16 ஆயிரத்து 390 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, ஆயிரம் புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன.

இரண்டு ஆண்டுகளில் பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாக கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம், திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.