ETV Bharat / state

மகாகவி பாரதியார் நினைவு நாள்: அவர் படித்த வகுப்பறையில் இசை அஞ்சலி செலுத்திய நெல்லை பள்ளி மாணவிகள்! - nellai bharathiyar Memorial Day - NELLAI BHARATHIYAR MEMORIAL DAY

Bharathiyar Memorial Day: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று திருநெல்வேலியில் அவர் படித்த பள்ளி வகுப்பறையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்பு பள்ளி மாணவிகள் அவரது பாடல்களை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

பாரதியார் பாடல் பாடி இசை அஞ்சலி செலுத்தும் மாணவிகள்
பாரதியார் பாடல் பாடி இசை அஞ்சலி செலுத்தும் மாணவிகள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 4:28 PM IST

திருநெல்வேலி: மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் பிறந்து நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தனது பள்ளி படிப்பை மேற்கொண்டார்.

பாரதிக்கு இசை அஞ்சலி செலுத்தும் மாணவிகள் (Credits- ETV Bharat Tamil Nadu)

அவர் படித்த பள்ளி வகுப்பறை இன்றைய தினமும் நாற்றங்கால் என்ற பெயரில் பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகுப்பறையில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களும் அவரது மார்பளவு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரதியின் நினைவு தினமான இன்று காலை 10 மணி அளவில் அப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாரதியார் படித்த வகுப்பறையில் இருக்கும் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் பாரதி படித்த சுதந்திர பாடல்கள் பாடி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்து மகாகவி பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதையும் படிங்க: நான்தான் காந்தி..! நான்தான் சுபாஸ்..! - சுதந்திர தின மாறுவேடப் போட்டியில் கலக்கிய சிறுவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.