ETV Bharat / state

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் படுகொலை; 8 தனிப்படைகள் அமைப்பு.. ஈபிஎஸ், அண்ணாமலை கண்டனம்! - BSP TN Unit President Murder - BSP TN UNIT PRESIDENT MURDER

BSP TN Unit President: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BSP
BSP TN Unit President armstrong (Credits - BSP TN Unit FB page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 8:37 PM IST

Updated : Jul 6, 2024, 7:43 AM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே நின்றுகொண்டு, அவரின் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், சாலையில் நின்றுகொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற இருவரையும் மர்ம கும்பல் வெட்டியுள்ளது.

இதையடுத்து, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஆம்ஸ்ட்ராங் அப்பகுதியில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, கிச்சைக்காக ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்க்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்பியம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரம்பூர் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்தில் வடக்கு இணை ஆணையர் அபிஷேக் தீக்ஷித் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

மேலும், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல வந்து கொலையை அரங்கேற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், படுகொலை செய்த மர்ம கும்பலைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே உள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தும், காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன். ஆர்ம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, அக்கட்சியின் தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது?

காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம். ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இன்று சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் அனைவருடனும் தமிழ்நாடு பாஜக ஆறுதலாக துணை நிற்கிறோம்.

நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராக தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மாமியாரை கொலை செய்த மருமகள் - பேரன் கைது.. வாணியம்பாடியில் பயங்கரம்!

Last Updated : Jul 6, 2024, 7:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.