ETV Bharat / state

"இது என்ன விவாத மேடையா?" - விவசாயிகளிடம் கேட்ட தாளவாடி வட்டாட்சியர்.. திடீரென முற்றிய வாக்குவாதம்!

தாளவாடி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், வட்டாட்சியர் மற்றும் விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

farmer protest at erode  thalavadi Tehsildar  thalavadi taluk office  தாளவாடியில் விவசாயிகள் போராட்டம்
வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேசும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

ஈரோடு: தாளவாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, டிவி ஷோ நடத்துகிறீர்களா? முறையாக அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதே தவறு என வட்டாட்சியர் கூறியதால், வட்டாட்சியர் மற்றும் விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டார மலைக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று தாளவாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், தாளவாடி வனப்பகுதி எல்லை முழுவதும் பழைய ரயில்வே தண்டவாளத்தின் வேலி அமைக்கும் பணியை வனத்துறை தொடங்க வேண்டும். அதேபோல், தமிழக - கர்நாடக எல்லையான ராமாபுரத்தில் கர்நாடக அரசு ரயில்வே தண்டவாள வேலி அமைக்க வலியுறுத்த வேண்டும்.

வட்டாட்சியர் மற்றும் விவசாயிகள் வாக்குவாதம் செய்யும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மழைக்காலங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்க்க நெய்தாளபுரம், தலமலை, மாவள்ளம், குழியாடா ஆகிய வனக் கிராமங்களில் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்க வேண்டும். முதியனூரில் யானை தாக்கி உயிரிழந்த சிக்குராமன் குடும்பத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ரூ.15 லட்சம் நிவாரணத்தை உடனே வழங்குவது மட்டுமின்றி, அவரது குடும்பத்தினருக்கு வனத்துறையில் வேலை வழங்க வேண்டும்.

மனித - விலங்கு மோதலில் உயிரிழக்கும் மக்களுக்கு கர்நாடகத்தில் வழங்குவது போல, தமிழக வனத்துறை இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தாளவாடி மலைப்பகுதி மக்கள் 24 மணி நேரம் திம்பம் மலைப்பாதையில் பயணிக்க உடனடியாக பாஸ் வழங்க வேண்டும். தாளவாடி மலைப் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது. தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்யும் காட்டுப் பன்றிகளை விவசாயிகள் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: அமைந்தகரை சிறுமி கொலை; 'இந்த மரணத்தை தட்டி விட்டு போக முடியாது' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

பின்னர் தகவலறிந்து வந்த வட்டாட்சியர் சுப்பிரமணியம், விவசாயிகள் கோரிக்கைகளை பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். ஆனால், விவசாய சங்கத்தினர், விவசாயிகள் தற்போது கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருமாறு கேட்டனர். அதற்கு இது என்ன விவாத மேடையா? நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் உடனே பதில் சொல்வதற்கு? டிவி ஷோ நடத்துகிறீர்களா? முறையாக அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதே தவறு என கோபமாக பதிலளித்தார் .

அதையடுத்து, எழுத்து பூர்வமாக மனு அளித்தால் மட்டுமே மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்து பாதியிலேயே வட்டாட்சியர் வெளியேறினார். அதனால் விவசாயிகளுக்கும், வட்டாட்சியருக்கும் இடையை வாக்குவாதம் நிலவியது. அதனைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர், விவசாயிகள் எழுத்து பூர்வமாக கோரிக்கை மனுவை எழுதிக் கொடுத்தனர். அதையடுத்து பெருந்திரள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.