ETV Bharat / state

NAAC கமிட்டிக்கு சென்ற அண்ணா பல்கலை போலி ஆசிரியர்கள் விவகாரம்; அடுத்த நடவடிக்கை என்ன? - faculty fradu issue - FACULTY FRADU ISSUE

Arappor Iyakkam: கல்லூரிகள் போலியான பேராசிரியர்களையோ அல்லது மற்ற தரவுகளை போலியாக காண்பிக்கப்பட்டு NBA மற்றும் NAAC அங்கீகாரம் பெற்றிருந்தால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

அண்ணா பல்கலை -கோப்புப்படம்
அண்ணா பல்கலை - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 10:06 PM IST

சென்னை : கடந்த 2023-24 ஆம் கல்வியாண்டில், நூற்றுக்கணக்கான கல்லூரிகளில், போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்றதை அறப்போர் இயக்கம் கடந்த ஜூலை 23 ஆம் தேதியன்று ஆதாரத்துடன் வெளியிட்டது. அந்த ஆதாரங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய, மாநில உயர்கல்வித்துறை சார்ந்தோருக்கும் மற்றும் விசாரணை அமைப்புக்கும் புகார் அளித்தது.

அதைத்தொடர்ந்து இன்று (ஆக 27) பேராசிரியர் அனில் D.சஹஸ்ரபுதே (Chairman - The National Board of Accreditation, NEW Delhi) அவர்களுக்கும், பேராசிரியர் கணேசன் கண்ணபிரான், (The National Assessment and Accreditation Council director) அவர்களுக்கும் புகார் மற்றும் ஆதாரங்களை அனுப்பியுள்ளது.

அந்த புகாரில், "அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்குழுவுடன் கூட்டு சேர்த்து கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற நிலையில், அந்த பட்டியலில் உள்ள பல கல்லூரிகள் NBA மற்றும் NAAC அங்கீகாரம் பெற்றுள்ளது.

எனவே, அந்த தரவுகளை மறு ஆய்வு செய்து போலியான பேராசிரியர்களையோ அல்லது மற்ற தரவுகளை போலியாக காண்பிக்கப்பட்டு NBA மற்றும் NAAC அங்கீகாரம் பெற்றிருந்தால் அவற்றை ரத்து செய்யவேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை பரிந்துரைக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தரமான உயர்நிலைக் கல்வி வழங்குவதை உறுதிசெய்யவும், அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும்" என அறப்போர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : கூட்டுறவுத் துறையின் சேவைகளை தெரிந்து கொள்ள ’கூட்டுறவு ஆப்’ துவக்கம்! - kooturavu app

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.