ETV Bharat / state

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வழங்கியதில் முறைகேடா? நீதிமன்றத்தின் உத்தரவு என்ன? - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

Alanganallur jallikattu issue: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 10:39 PM IST

மதுரை: சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அபி சித்தர். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "பொங்கல் பண்டிகையையொட்டி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக முறையாக ஆன்லைனில் பதிவு செய்து, உடல் தகுதி சோதனையில் கலந்து கொண்டு 2வது சுற்றில் மாடுபிடி வீரராக கலந்து கொண்டேன். 3வது சுற்று வரை 11 காளைகளை அடக்கி விழாக்கமிட்டியால் இறுதிச்சுற்றில் விளையாட வைப்பதாகக் கூறி வெளியேற்றப்பட்டேன்.

பின்பு கடைசி சுற்றில் 7 மாடுகளை பிடித்தேன். மொத்தமாக 18 காளைகளை அடக்கினேன். ஆனால் விழா கமிட்டி கருப்பாயூரணியைச் சேர்ந்த மாடுபிடி வீரரான கார்த்திக் 18 காளைகளை அடக்கியதாக கூறி முதல் பரிசை அவருக்கு அறிவித்தனர். இதுகுறித்து விழா கமிட்டியினரிடம் முறையிட்டும் எனக்கு தகுந்த நீதி கிடைக்கவில்லை.

என்னை விட கார்த்திக் என்பவர் 1 காளை குறைவாகவே பிடித்தார். நான் 18 காளைகளை அடக்கியதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு அறிவிப்பில் குழப்பம் மற்றும் சில காரணங்களுக்காக கார்த்திக் முதல்பரிசு பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அதிக காளைகளை அடக்கிய என்னை முதல்பரிசு பெற்ற வீரராக அறிவிக்க வேண்டும்" என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(பிப்.6) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபி சித்தரின் மனு குறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பலகை உடைந்து விபத்து - உயிர் தப்பிய பயணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.