ETV Bharat / state

தரையிறங்கும் விமானம் மீது லேசர் லைட்: இந்தியா விமான நிலைய ஆணையம் கொடுத்த வார்னிங்! - Pointing lasers at aircrafts

lasers pointing issue at landing aircrafts: சென்னை விமான நிலையத்தில், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தரையிறங்க வரும் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிக்கும் விஷமிகள் குறித்து சென்னை விமான நிலையத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கோ அல்லது காவல்துறைக்கோ தகவல் தெரிவிக்கும்படி இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

lasers pointing issue at landing aircrafts
lasers pointing issue at landing aircrafts (Photo Credits - Chennai Airport 'X' Account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 1:18 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக, வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து, சென்னைக்கு வந்து தரையிறங்கும் விமானங்கள், ஓடுபாதையில் தரை இறங்குவதற்காக, தாழ்வாகப் பறக்கும் போது விமானத்தை நோக்கி லேசர் லைட் ஒளி அடிப்பது அவ்வப்போது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த லேசர் லைட் ஒளி சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என்று மாறுபட்ட நிறங்களில், அவ்வப்போது ஒளிரச் செய்யப்படுகிறது.

இது விமான போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தானது. இந்த லேசர் லைட் ஒளி விமானத்தின் மீது பாய்ச்சும் போது, அது விமானியின் கண்களை நோக்கிப் பாய்வதால், விமானி ஒரு சில வினாடிகள், விமானத்தை இயக்குவதில் திணறும் நிலை ஏற்படுகிறது. ஆனாலும் விமானிகள் சமாளித்துக் கொண்டு, விமானத்தை தரையிறக்குகின்றனர். சில விமானிகள், விமானத்தைத் தரையிறக்காமல், மீண்டும் உடனடியாக வானில் பறக்கச் செய்து விட்டு, அதன்பின்பு விமானத்தை தரையிறக்குகின்றனர்.

இந்த சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக, சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. துபாய், சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் சர்வதேச விமானங்கள், டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் உள்நாட்டு விமானங்கள் உள்ளிட்டவை இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இந்த சம்பவங்கள் நடக்கின்றன. அதிலும் தரையிறங்கும் விமானங்களை நோக்கி தான் இந்த லேசர் லைட் ஒளி பாய்ச்சப்படுகிறது. சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானங்களுக்கு இந்த லேசர் லைட் ஒளி அபாயம் ஏற்படுவது கிடையாது. மேலும் இதுபோன்ற லேசர் லைட் ஒளி, பரங்கிமலை, நந்தம்பாக்கம் மற்றும் பழவந்தாங்கல் பகுதியிலிருந்தும் அடிக்கடி வருவதாகவும் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வந்த லேசர் லைட் ஒளி, சென்னை சேப்பாக்கம் பகுதியிலிருந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது.

ஆகையால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக குறிப்பிட்ட விமானத்தின் விமானி அல்லது சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவ்வப்போது பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் ஊழியர்கள் உட்பட சிலரைப் பிடித்து வந்து விசாரணை மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தான் லேசர் லைட் ஒளி அடித்தனர் என்பதற்கு முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், கடுமையாக எச்சரித்து அனுப்புகின்றனர்.

ஆனாலும், இந்த லேசர் லைட் ஒளி தற்போதும் அவ்வப்போது, விமானங்களை நோக்கி அடிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்கள், சென்னை விமான நிலையத்திற்கு, விமானங்களை இயக்குவதற்குத் தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இது இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

லேசர் லைட் ஒளி அடிப்பவர்கள் இதை விளையாட்டாகச் செய்கின்றனர். ஆனால் இதில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக விமானங்கள் தரையிறங்கும் போது பாதிப்புகள் ஏற்படுவதோடு, விமான பயணிகள், விமானிகள், விமான ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவிக்கின்றது.

லேசர் லைட் ஒளி அடிப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், மிகவும் சீரியஸான ஒரு பிரச்சனையாக எடுத்துக்கொண்டு, இந்த சமூக விரோத செயலை செய்யும் விஷமிகள் மீது, இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தனது சமூக வலைத்தளத்தில், சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சமுதாய பொது நலன் கருதி, இதைப்போல் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிப்பவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கோ அல்லது காவல்துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற கொடிய செயல்களைச் செய்பவர்கள் மீது காவல்துறை மூலம், மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: ரூ.1.07 கோடி மதிப்புடைய 1.7 கிலோ தங்கம் பறிமுதல்.. உள்ளாடைக்குள் தங்கப்பசை வைத்திருந்த இளம்பெண் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.