தென்காசி: கடையநல்லூர் அருகே புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம் அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற கோயிலாக காணப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள அருள் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகாத்தம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஐப்பசி மாத பெரும் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவியர் கோயில் குருநாதர் சக்தியம்மா, தனது ஆன்மீக வாழ்க்கையில் 32வது ஆண்டாக நடந்த மகா பெரும் பூஜை திருவிழாவில், 7 வயது சிறுவனாக இருந்த போது அருள் வாக்கு பலிததிற்காக சென்னையில் உள்ள பெரிய பாளையத்து பவானி அம்மன் தனது நாவினில் குடிகொண்ட நாளையே மகாபெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், குங்குமம், உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. குருநாதர் சக்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் அக்னி சட்டியுடன் காலை 9 மணி 10 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்.. உதயநிதி ஸ்டாலின்!
கோயில் ஐதீகம்: குருநாதர் சக்தியம்மா பெண் வேடத்தில் அருள் வாக்கு கொடுக்கும் இந்நாளில், பக்தர்கள் குருநாதர் சக்தியம்மாவிற்கு சேலை எடுத்து கொடுக்கும் போது நமது வாழ்வில் அனைத்து நலமும் கிடைக்கும், பக்தர்களுக்கு கொடுக்கும் அருள்வாக்கு ஒரு வருடத்திற்குரிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், இந்த பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் திருமணத்தடை, குழந்தை வரம், வியாபாரம் அபிவிருத்தி பெறும், நீண்ட நாள் தீராத வியாதிகள் குணமடையும், பில்லி சூனியம், ஏவல், நீக்கி மகிழ்சியான வாழ்வு கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
இந்நிகழ்ச்சியில் புளியங்குடி மட்டுமல்லாமல் விருதுநகர், தேனி, குமுளி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கோயில் வளாகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்ட இடங்களில் இருந்த பக்தர்களுக்கு அவர்கள் இடத்திற்கே குருநாதர் சக்தியம்மா நேரில் சென்று தீர்த்த தண்ணீர் தெளித்துள்ளார்.
இது குறித்து ஐப்பசி மாக பெரும் பூஜை திருவிழாவில் பங்கேற்ற மகேஷ் பிரியா கூறுகையில், "இந்த கோயிலுக்கு நான் மூன்று வருடத்திற்கு மேலாக வருகை புரிகிறேன். இங்கு வந்ததன் மூலமாக எனக்கு கடன் பிரச்சினை தீர்ந்துள்ளது. மேலும், எனது குடும்பத்தில் தற்பொழுது வரை எந்தவிதமான சண்டை, சச்சரவு இல்லாமல் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். பவானி அம்மன் கோயிலில் பணக்காரர்கள் மட்டுமல்லாமல் ஏழை எளியவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பூஜைகள் நடைபெறுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்