ETV Bharat / state

“அதிமுக தரும் வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை” - மன்சூர் அலிகான் திட்டவட்டம்! - Mansoor Ali Khan slams PM Modi

Mansoor Ali Khan: “மீண்டும் மோடி ஆட்சியமைக்க, தமிழகத்தில் அவர் காலூன்ற நான் விடமாட்டேன். அதற்கான ஆயுதத்தை கையில் எடுப்பேன்" என நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனருமான மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.

நடிகர் மன்சூர் அலி கான் செய்தியாளர் சந்திப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 4:01 PM IST

சென்னை: பிரபல திரைப்பட நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனருமான மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் என்னோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக போன்ற பெரிய இயக்கத்தின் மூலம் எனக்கொரு எம்.பி பதவி கிடைத்து விடும் என்று சில ஊடகங்களுக்கு பொறாமை. அதனால்தான் என்னைப் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். திமுக, அதிமுக நாங்கள் எல்லாம் பங்காளி சண்டைகள் போட்டுக் கொள்வோம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

ஆனால், இந்த மண்ணுக்கு தொடர்பில்லாத இயக்கத்தை இங்கு வேரூன்ற விடமாட்டோம். அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், அவர்கள் தரும் வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை. வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை இன்றே தொடங்க இருக்கிறேன்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகுதான் ஜிஎஸ்டி, நீட் தேர்வு உள்ளிட்ட பல நாசகரமான வேலைகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி விட்டன. பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது பிச்சை இடுவதற்குச் சமம் என்று குஷ்பு கூறியிருப்பது தவறானது, கண்டிக்கத்தக்கது.

அவரால் இயன்றால் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியதுதானே. என்னை யாரும் தகுதி இல்லாதவன் என்று குறைத்து மதிப்பிட வேண்டாம். மீண்டும் மோடி ஆட்சியமைக்க, தமிழகத்தில் அவர் காலூன்ற நான் விடமாட்டேன். அதற்கான ஆயுதத்தை கையில் எடுப்பேன்" எனப் பேசினார்.

மேலும் பேசிய அவர், "போதைப்பொருள் அனைத்தும் குஜராத் துறைமுகத்திலிருந்து வருகிறது. அது யாருடைய துறைமுகம்? தங்களுக்கு வர வேண்டிய பணம் வந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். போதைப்பொருள் விற்பவர்களை கடுமையாக தண்டித்தால் யாரும் அந்த தவறை செய்ய மாட்டார்கள்.

படிப்பகங்ககளை அதிகமாக்கி, குடிப்பகங்களை குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். அப்போதுதான் போதைப்பொருட்களின் நடமாட்டம் குறையும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசும்போது, என் வீட்டுக்கு ED ரெய்டு வந்தாலும் எனக்கு பயமில்லை எனத் தெரிவித்தார். பின்னர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "கிளியை வளர்த்து வேறு ஒருவர் கையில் கொடுத்து விட்டீர்களே நாட்டாமை" என்று சரத்குமாரை விமர்சித்து பேசினார் மன்சூர் அலிகான்.

இதையும் படிங்க: ஜாஃபர் சாதிக் விவகாரம்: ஈபிஎஸ், அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.