ETV Bharat / state

பள்ளி வேன் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு.. 20 குழந்தைகள் உயிரை காப்பாற்றிவிட்டு மரணம்.. மனைவி கண்முன் நடந்த சோகம்! - Tirupur school van driver death

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 5:31 PM IST

Tirupur school van driver death: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனியார் பள்ளி வேன் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, சாதுர்யமாக செயல்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்தியதால் 20 குழந்தைகள் உயிர் தப்பினர். வேன் ஓட்டுநர் தனது மனைவி கண்முன்னே ஸ்டேரிங்கில் சாய்ந்தவாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த வேன் ஓட்டுநர் புகைப்படம்
உயிரிழந்த வேன் ஓட்டுநர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பூர்: காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் கே.பி.சி நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (49), வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை வேனில் அழைத்து சென்றுள்ளார். அதே வேனில் மனைவி லலிதாவும் உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் வேன் வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் சேமலையப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மிகவும் சிரமப்பட்டு வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, சேமலையப்பன் ஸ்டேரிங்கில் மயங்கி சரிந்ததை கண்ட மாணவர்கள் மற்றும் மனைவி லலிதா ஆகியோர் அலறினர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வேனில் ஏறி பார்த்துவிட்டு உடனடியாக சேமலையப்பனை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி வேன் ஓட்டும் போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழும் நிலையிலும் வேனில் உள்ள குழந்தைகளின் உயிரை காப்பாற்றி விட்டு தனது உயிரை விட்ட ஓட்டுநர் சேமலையப்பன் புகைப்படங்களை சமூக வலைத்தங்களில் பகிர்ந்த பலரும், கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்த சேமலையப்பனுக்கு உமா, ஜானகி, லலிதா ஆகிய மூன்று மனைவிகள் உள்ளனர். தற்போது லலிதா மட்டும் இவருடன் உள்ளார். லலிதாவிற்கு ஹரிஹரன் (17), ஹரிணி (15) இரு பிள்ளைகள் உள்ளனர்.

லலிதா வெள்ளகோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎல் கிரிக்கெட்: நெல்லையை வீழ்த்தி திருப்பூர் த்ரில் வெற்றி! யார்க்கர் கிங் நடராஜன் அபாரம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.