ETV Bharat / state

தமிழ்நாட்டில் கஜகஸ்தான் ஜோடி இந்து முறைப்படி காதல் திருமணம்..! - Kazakhstan Couple Married in TN

Kazakhstan Couple weds in Tamil Hindu Culture: கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தம்பதி தமிழ் கலாச்சாரத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மாலை மாற்றி மாங்கல்ய தாரம் செய்து பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட கஜகஸ்தான் நாட்டு தம்பதி
இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட கஜகஸ்தான் நாட்டு தம்பதி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 7:34 PM IST

தமிழ் கலாச்சாரத்தில் கஜகஸ்தான் ஜோடி திருமணம் (Video Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த டிமித்ரி - எலேனா தம்பதிகள் கணினி மென்பொருள் பொறியாளர்களாக உள்ளனர். உலகம் முழுவதும் சுற்றிவரும் இவர்கள் இந்து மதத்தில் ஆர்வம் கொண்டு கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மதம் மாறி உள்ளனர். மேலும், தமிழ் கலாச்சாரம் மீதும் கொண்ட பற்று காரணமாக, ஆண்டுக்கு ஒரு முறை தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், கிறிஸ்தவ முறைப்படி திருமணமான இவர்கள், இந்து மதத்திற்கு மாறியதாலும் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்றுதலாலும் தமிழ் முறைப்படி, திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதற்காக, தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள இவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, மாலை மாற்றி மாங்கல்ய தாரம் செய்து பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். நல்லாடை கிராமத்தைச் சார்ந்த நாடி ஜோதிடர் கோபிநாத் மற்றும் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இவர்களின் திருமணத்திற்கு வருகை தந்து, மணமக்களுக்கு நலங்கு வைத்து, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்ற தம்பதியினர், சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: வயல்களில் காட்டுப்பன்றிகள் அட்டூழியம்.. மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை! - Pigs Damaged In Filed

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.