ETV Bharat / state

ஜவுளி கழிவு மறுசுழற்சி தொழிலுக்கு தனி வாரியம் அமைக்க வலியுறுத்தல்! - Textile Waste Recycling Association

TN Baniyan and Textile Waste Recycling Mills Association: தமிழக அரசு மின் கட்டணத்தைக் குறைத்து, பனியன் மற்றும் ஜவுளி கழிவு மறுசுழற்சி தொழிலுக்கு தனி வாரியம் அமைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு பனியன் மற்றும் ஜவுளி கழிவு மறுசுழற்சி ஆலைகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு பனியன் மற்றும் ஜவுளி கழிவு மறுசுழற்சி ஆலைகள் சங்கத்தினர்
தமிழ்நாடு பனியன் மற்றும் ஜவுளி கழிவு மறுசுழற்சி ஆலைகள் சங்கத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 4:45 PM IST

Updated : Aug 25, 2024, 6:57 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம் தாளப்பதி பகுதியில் தமிழ்நாடு பனியன் மற்றும் ஜவுளி கழிவு மறுசுழற்சி ஆலைகள் சங்கம் சார்பில் முதல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மறுசுழற்சி முறையில் நீர் மாசுபடுதல், சுற்றுச்சூழல் மாசுபடுதல் முற்றிலும் தடுக்கப்படுகிறது என்பதை மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சலுகைகள் பெறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாடு பனியன் மற்றும் ஜவுளி கழிவு மறுசுழற்சி ஆலைகள் சங்கத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுமட்டுமல்லாது, கொள்முதல் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைத்து, குறைந்தபட்ச கொள்முதல் விலை பட்டியலை வெளியிடுதல் என்றும், தொழிலாளர் ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர் நலன் விபத்து காப்பீடு போன்றவற்றுக்கு ஆலோசனை வழங்கி தீர்வு காணுதல், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுவான நடுநிலையோடு சங்கம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், சங்கத்திற்கான விதிமுறைகள் வெளிப்படுத்தப்பட்டு அதை முறையாக பின்பற்றவும் அறிவுரை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்நாடு பனியன் மற்றும் ஜவுளி கழிவு மறுசுழற்சி ஆலைகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகி சூரியகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "இந்த வேஸ்ட் ரீசைக்கிளின் தொழிலானது, நமது நாட்டிற்கு 30 சதவிகிதம் அந்நியச் செலாவணி வருவாயை ஈட்டித் தரும் தொழிலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, இந்த தொழிலைச் சார்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆகவே, தமிழக அரசு மின் கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் இந்த தொழிலை மேம்படுத்த முடியும். இதற்கென்று தனி வாரியம் அமைத்திட வேண்டும். மேலும், சங்கத்திற்கு இயந்திரங்கள் வாங்கும் போது மானியமும், மத்திய மாநில அரசுகள் பல சலுகைகளையும் அறிவிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு பனியன் மற்றும் ஜவுளி கழிவு மறுசுழற்சி ஆலைகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மத அடிப்படையிலான நிகழ்ச்சியை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.. கே.பாலகிருஷ்ணன் கருத்துக்கு சேகர் பாபு பதில்!

Last Updated : Aug 25, 2024, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.