ETV Bharat / state

ஒரே நாளில் 3.24 லட்சம் பேர் மெட்ரோ பயணம்.. ஏப்ரல் மாத பயண விவரத்தை வெளியிட்ட நிர்வாகம்! - CHENNAI METRO RAIL - CHENNAI METRO RAIL

CHENNAI METRO RAIL: சென்னையில் அதிகபட்சமாக, ஏப்ரல் 8ம் தேதி ஒரே நாளில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 055 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CHENNAI METRO RAIL
CHENNAI METRO RAIL
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 1:13 PM IST

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயில்களில் 80 லட்சத்து 87 ஆயிரத்து 712 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 86 லட்சத்து 15 ஆயிரத்து 008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86 லட்சத்து 82 ஆயிரத்து 457 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 80 லட்சத்து 87 ஆயிரத்து 712 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக, ஏப்ரல் 8ம் தேதி அன்று 3 லட்சத்து 24 ஆயிரத்து 055 பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 33 லட்சத்து 34 ஆயிரத்து 498 பயணிகள் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 33 லட்சத்து 23 ஆயிரத்து 602 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 61 ஆயிரத்து 976 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 4 ஆயிரத்து 285 பயணிகள்.

மேலும், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 13 லட்சத்து 63 ஆயிரத்து 351 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொந்த மகளுக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. தந்தைக்கு சாகும் வரை சிறை! - POCSO Case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.