சென்னை: மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீம் அஹமத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பார்' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான நீதிபதி விக்டோரியா கெளரி, நீதிபதி ஶ்ரீ பிள்ளைப்பாக்கம் பகுக்குட்டும்பி பாலாஜி, நீதிபதி ஶ்ரீ கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன், நீதிபதி ராமச்சந்திர கலைமதி, நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாகவும் நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்தம் 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சமீம் அஹமத் நியமனத்தையும் சேர்த்து நீதிபதிகளின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மீதம் காலியாக உள்ள 12 நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!