சென்னை: பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் இன்று (ஆக.31) மாலை முதல் நடைபெற உள்ளது. நாளை (செப்.1) முக்கிய போட்டிகள் நடைபெற உள்ளன. தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தப்பட உள்ளதால் இந்தப் போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் மட்டுமே நடைபெறும் பார்முலா கார் பந்தயத்தை நம் ஊரில் நேரில் காணலாம் என விரும்பி செல்லும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்களை பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் இடம் மற்றும் பார்வையாளர்கள் இடத்திற்குள் கொண்டு செல்லக் கூடாது என விரிவாக பார்க்கலாம்.
- கண்டைனர் / தண்ணீர் பாட்டில்கள் / கண்ணாடி பாட்டில்கள் - மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், திறந்த தண்ணீர் பாட்டில்கள், டின்கள், கேன்கள்.
- ட்ரோன்கள் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பறக்கும் சாதனம்.
- புகைபிடிக்கும் சாதனங்கள்/பொருள்கள் - சீல் செய்யப்படாத சிகரெட்டுகள், லைட்டர்கள், மின்-சிகரெட் & வேப்ஸ் போன்றவை.
- தொழில்முறை ஆடியோ ரெக்கார்டிங் உபகரணங்கள் - அனைத்தும் (ஊடகங்கள் / பத்திரிகை பணியாளர்களை தவிர).
- தொழில்முறை கேமராக்கள் மற்றும் தொழில்முறை பதிவு உபகரணங்கள் - (புகைப்படம், வீடியோ, ஆடியோ) - தொழில்முறை ஜூம் லென்ஸ்கள், ஸ்டாண்டுகள், மோனோபாட்கள், ட்ரைபாட்கள், இணைப்பு குச்சிகள் (செல்ஃபி ஸ்டிக்ஸ்) பிற வணிக உபகரணங்களுக்கு அனுமதி இல்லை.
- தனியார் வாகனங்கள் - ஸ்கேட்போர்டுகள், ரோலர்பிளேடுகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், வண்டிகள் அல்லது தனிப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் போன்றவைக்கு அனுமதி இல்லை.
- தனிப்பட்ட பொருட்கள்/ உபகரணங்கள் - கைப்பைகள், குடைகள், லேப்டாப், லேப்டாப் பைகள், சூட்கேஸ், பெரிய மின்விசிறிகள், மோட்டார் சைக்கிள், தலைக்கவசம், தலைக்கவசங்கள் போன்றவை (பெண்களின் கைப்பைகள் மற்றும் போர்ட்டபிள் நெக் ஃபேன்கள் தவிர) ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.
- விற்பனையாளர் ஊர்திகளுக்கு எந்த வகையிலும் அனுமதி இல்லை
- வீசும்பொருட்கள் - தண்ணீர் பலூன்கள், முட்டை, பிளாஸ்டிக் பாட்டில் மூடிகள்
- இழிவு அடையாளங்கள் அல்லது பதாகைகள் - ஜாதி, மதம், பாலினம், மதம் மற்றும் இனத்திற்கு எதிராக புண்படுத்தும் பதாகைகள் அல்லது தவறான / பாரபட்சமான மொழி.
- அனுமதிக்கப்படாத விளம்பரம் - அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பொருட்கள் (வணிக லோகோக்களைக் காண்பித்தல், அமைப்பாளரின் பார்வையில், பந்தயம் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ விளம்பரதாரரின் உரிமைகளுடன் முரண்படும் அல்லது எந்த வகையிலும் விலகும், மற்றும் / அல்லது அமைப்பாளரின் பார்வையில், "அனுமதிக்கப்படாத விளம்பரம்" என கருதப்படும்) வணிக விளம்பரம், ஆடை, தொப்பிகள், பதாகைகள், கொடிகள் போன்றவை.
- மற்றவை - ஸ்ப்ரே பெயிண்ட்ஸ், ஃபேண்டம் ஸ்டிக் லைட்ஸ், ஹாம்மோக்ஸ், டோடெம்ஸ் போன்றவை.
இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இந்த விதிகள் பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அதிகாரிகள் என பார்முலா 4 பந்தயத்தை காணச் செல்லும் அனைவருக்கும் பொருந்தும். இந்தப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2-வில் காணலாம். மொபைலில் பார்க்க விரும்புபவர்கள் ஃபேன்கோட் (fancode) செயலியில் கட்டணம் செலுத்தி பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Watch: ஒரே ஓவரில் 6 சிக்சர்! டிபிஎலில் அதிரடி அட்டகாசம்! - Delhi Premier League 2024