ETV Bharat / sports

U19 ஒருநாள் உலகக் கோப்பை 2024: இந்திய அணி அபாரம்.. 201 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த அயர்லாந்து! - musheer khan

U19 ODI World Cup 2024: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியுள்ளது.

India beat ireland by 201 runs
India beat ireland by 201 runs
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 9:23 PM IST

Updated : Jan 26, 2024, 2:42 PM IST

ப்ளூம்ஃபோன்டைன்: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் கடந்த 19ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வரும் இத்தொடர் 4 குரூப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி குரூப் ஏ-வில் உள்ளது.

கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேசம் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில், இன்று (ஜன.25) அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அசாதாரணமாக 301 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர்கள் சுமாரான தொடக்கத்தையே அளித்தாலும், அதன்பின் களம் இறங்கிய முஷீர் கான் மற்றும் கேப்டன் உதய் சஹாரன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். இந்த பார்ட்னர்ஷிப் 156 ரன்கள் குவித்த பின்பே பிரிந்தது. உதய் சஹாரன் 84 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதன்பின் சதம் விளாசிய முஷீர் காண் 4 சிக்சர்கள், 9 ஃபோர்கள் உட்பட 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது.

ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக டேனியல் ஃபோர்கின் 27, ஆலிவர் ரிலே 15, ரியான் ஹண்டர் 13 மற்றும் ஜோர்டான் நீல் 11 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் அயர்லாந்து அணி 100 ரன்களுக்கு அல் அவுட் ஆனது.

இந்திய அணியின் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் நமன் திவாரி 4 விக்கெட்களும், சுழற்பந்து வீச்சாளர் செளமி பாண்டே 3 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர். மற்ற பந்து வீச்சாளர்களான தனுஷ் கெளடா, முருகன் அபிஷேக் மற்றும் உதய் சஹாரன் ஆகியோர் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி வரும் 28ஆம் தேதி அமெரிக்கா அணியை எதிர்கொள்கிறது.

மேலும், இன்று (ஜன.25) நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜிம்பாப்வே - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரருக்கான விருது; 4வது முறையாக வென்ற விராட் கோலி!

Last Updated : Jan 26, 2024, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.