ETV Bharat / sports

சன்ரைசஸ் ஐதராபாத்தில் இணைந்த விஜயகாந்த் வியஸ்காந்த்! யார் இவர்? - Vijayakanth Viyaskanth at SRH - VIJAYAKANTH VIYASKANTH AT SRH

SRH IPL 2024 Squad Update: இலங்கை வீரர் விஜயகாந்த் வியஸ்காந்த் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். மற்றொரு இலங்கை வீரர் ஹசரங்கா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகிய நிலையில் விஜயகாந்த் ஒப்பந்தமாகி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 7:34 PM IST

Updated : Apr 10, 2024, 11:41 AM IST

ஐதராபாத் : காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு இலங்கை வீரர் விஜயகாந்த் வியஸ்காந்த் சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் இணைந்து உள்ளார். விஜயகாந்த் வியஸ்காந்தை அவரது அடிப்படை தொகையான 50 லட்ச ரூபாய்க்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்து உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை 1 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது. இந்நிலையில், இடது காலில் ஏற்பட்ட நாள்பட்ட வலி காரணமாக வனிந்து ஹசரங்கா நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வனிந்து ஹசரங்காவுக்கு பதிலாக மற்றொரு இலங்கை வீரர் விஜயகாந்த் வியஸ்காந்த் என்பவரை சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்து உள்ளது. அடிப்படை தொகையான 50 லட்ச ரூபாய்க்கு விஜயகாந்த் வியஸ்காந்தை ஒப்பந்தம் செய்து உள்ளதாக சன்ரைசஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விஜயகாந்த் வியஸ்காந்த் விளையாடி உள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு விஜயகாந்த் வியஸ்காந்தை விலைக்கு வாங்கிய பெங்களூரு அணி கடந்த ஆண்டு அணியில் இருந்து கழறிவிட்டது.

தொடக்க சீசனில் அபாரமாக பந்துவீசிய விஜயகாந்த் வியஸ்காந்த் 26 விக்கெட்டுகளை பெங்களூரு அணிக்காக வீழ்த்தினார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியஸ்காந்த் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : PBKS Vs SRH Toss: டாஸ் வென்று பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு! ஐதராபாத் ஆட்டம் கைகூடுமா? - IPL 2024

Last Updated : Apr 10, 2024, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.