பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரான்சில் தற்போது வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. கடும் உஷ்ணம் காரணமாக இந்திய வீரர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் கடும் உஷ்ணத்தால் அவதிப்படும் இந்தியர்களுக்கு 40 கையடக்க ஏசிகள் மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Finally our Indian athletes got AC in games Village at the Paris Olympics, the authorities didn't provide AC there and they have to face tough conditions in the humid weather there, so Sport's Ministry of India installed 40 AC there on their own expense @IndiaSports @Olympics pic.twitter.com/oBcmVzAbyc
— vipul kashyap (@kashyapvipul) August 2, 2024
இந்திய ஒலிம்பிக் சங்கம் மூலம் 40 கையடக்க ஏசிகள் பிரான்ஸ் தூதரகம் மூலம் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள இந்திய வீரர்களிடம் ஒப்பட்டைக்கப்பட்டு உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பாரீஸ் மற்றும் Chateauroux இடங்களில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இதில் Chateauroux பகுதியில் நடைபெற்ற ஆடவர் 50 மீட்டர் 3 நிலை துப்பாக்கிச் சுடுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே உள்பட அனைவரும் வெப்பத்தால் அவதிக்குள்ளான சம்பவம் அரங்கேறியது.
பாரீசில் தற்போது 40 டிகிரி செல்சியசை தொட்டு வெப்ப அலை வீசி வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கடும் வெப்ப அலை காரணமாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக வீரர் வீராங்கனைகள் தொடர்ந்து புகார் அளித்து உள்ளனர்.
இதையடுத்து பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் தங்களுக்கென தனியாக கையடக்க ஏசிகளை வாங்கிக் கொண்டனர். இந்நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகளுக்கும் மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏசிக்களை வாங்கி அனுப்பி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஏசி வாங்கிக் கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அதற்கான நிதியை மத்திய விளையாட்டு அமைச்சகம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அச்சச்சோ அவரா பயங்கரமான ஆளாச்சே! காலிறுதியில் இந்திய ஹாக்கி அணி யாருடன் மோதல்? - Paris Olympics 2024