ETV Bharat / sports

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா எப்போது ஓய்வு?: அடித்து சொல்லும் சிறுவயது பயிற்சியாளர்!

Rohit Sharma Retirement: டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுவது குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளர் கணித்துள்ளார்.

author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

Etv Bharat
Rohit Sharma (IANS Photo)

ஐதராபாத்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மையில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்ந்து நீடித்து வருகிறார். இந்நிலையில், ரோகித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவரது சிறு வயது பயிற்சியாளர் தினேஷ் லேட் கணித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு பின்னரும் ரோகித் சர்மா தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு பெறலாம் என்றார். இருப்பினும், 2027ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை ரோகித் சர்மா விளையாடலாம் என எண்ணுவதாக அவர் தெரிவித்தார்.

ரோகித் சர்மா வயது அதிகரித்து வருவதால் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த முடிவை எடுக்கலாம் என்று தினேஷ் லேட் கூறினார். ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தன்னை பிட்டாக வைத்துக் கொள்ள விரும்புவது கூட டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணமாக கூட இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவார் என்று தன்னால் 100 சதவீதம் உறுதியாக கூற முடியும் என்றும், ரோகித் சர்மா கிரிக்கெட் விளையாடும் விதம் நம்ப முடியாத வகையில் உள்ளதாகவும் தினேஷ் லேட் கூறினார். அண்மையில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-க்கு 0 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரியானா தேர்தலில் வினேஷ் போகத் வெற்றி! முதல்முறையாக எம்எல்ஏ ஆனார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.