பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரில், மகளிருக்கான 100 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தய பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பாராலிம்பிக்ஸ் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
பாரீஸில் இன்று (ஆக.30) நடைபெற்ற மகளிருக்கான 100 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் 100 மீட்டர் தூரத்தை 14.21 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
Bronze Medal Triumph! 🥉
— Paralympic Committee of India (@PCI_IN_Official) August 30, 2024
In an exclusive interview, Preeti Pal shares her thoughts after securing the bronze in Women’s 100m T35. Hear her speak about her incredible journey, and her proud moment for India! 🇮🇳✨#Cheer4Bharat #MachaDhoom #ProudMoment #Paris2024@IndianOilcl… pic.twitter.com/7vhGhvxBJv
இதில், 100 மீட்டரை 13.58 வினாடிகளில் கடந்து சீன வீராங்கனை சவு சியா (ZHOU Xia) தங்கம் வென்றார். மற்றொரு சீன விராங்கனை குவோ (GUO Qianqian) 13.74 வினாடிகளுடன் கடந்து 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து, 200மீ T35 பிரிவிலும் ப்ரீத்தி பால் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ப்ரீத்தி பால் கூறுகையில், "இது என்னுடைய முதல் பாராலிம்பிக்ஸ் பதக்கம். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தடகளப் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : பாரீஸ் பாராலிம்பிஸ்: ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்! - முதல் தங்கம் வென்று அசத்திய ராஜஸ்தான் வீராங்கனை! - firsr Gold medal for India