ETV Bharat / sports

கம்மின்ஸ் ஹாட்ரிக் எடுத்து அசத்தல்! 17 வருடங்களுக்கு பிறகு பிரட் லீயின் சாதனை சமன்! - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி பிரட் லீயின் சாதனையை பேட் கம்மினஸ் சமன் செய்துள்ளார்.

பேட் கம்மின்ஸ் மற்றும் பிரட் லீ
பேட் கம்மின்ஸ் மற்றும் பிரட் லீ (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 5:29 PM IST

சென்னை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில், ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த போட்டியில் பாதியிலேயே மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லுவிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

17 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் 18 வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 5வது பந்தில் அனுபவ பேட்ஸ்மேனான மஸ்மதுல்லா 2 ரன்கள் மட்டுமே எடுத்து தன் விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்ததாக வந்த மெஹதி ஹசன் ஜாம்பாவிடம் கேட்ச் குடுத்து வெளியேறினார். 18 வது ஓவரில் ஐந்தாவது மற்றும் கடைசி பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை சாய்த்த நிலையில் மீண்டும் கடைசி ஓவரை வீசுவதற்காக கம்மின்ஸ் அழைக்கப்பட்டார்.

அந்த ஓவரில் அவர் வீசிய முதல் பந்தில் ஹிரிடாய் பந்தை பின்புறம் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு நேராக ஹேசல்வுட் கையில் கேட்ச் கொடுத்தார். இதன் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரில் முதன்முதலாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி பேட் கம்மின்ஸ் அசத்தியுள்ளார்.

இதன்மூலமாக ஆஸ்திரேலியா அணிக்காக டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பிரட் லீயின் சாதனையை சமன் செய்துள்ளார். பிரட் லீ 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இதே வங்கதேச அணியுடன் தனது ஹாட்ரிக்கை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இச்சாதனையை பேட் கம்மின்ஸ் 17 வருடங்களுக்கு பிறகு சமன் செய்துள்ளார்.

மொத்தமாக டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் வீழ்த்தும் 7வது வீரராக கம்மின்ஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் பிரட் லீ, குர்திஸ் காம்பர், ஹசரங்கா, ரபாடா, கார்த்திக் மெய்யப்பன், ஜோஷ்வா லிட்டில் ஆகியோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டில் வங்கதேசத்தை அசால்டாக வீழ்த்திய ஆஸ்திரேலியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.