திருநெல்வேலி: 8வது டிஎன்பில் கிரிக்கெட் தொடர் சேலம், மற்றும் கோவையைத் தொடர்ந்து தற்போது திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 6 லீக் போட்டிகள் மட்டுமே உள்ளதால் டாப் 4 இடத்தை பிடிக்கும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற 22வது லீக் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் - ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியுடன் மோதியது.
A win against SMP tonight helps LKK storm through to the playoffs. 👏
— TNPL (@TNPremierLeague) July 23, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#SMPvLKK #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/x3tgxi4sKu
164 இலக்கு: திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷாருக்கான் 26 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரி என 51 ரன்கள் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக சாய் சுதர்சன் 34 ரன்களும், முகிலேஷ் 21 ரன்களும் விளாசினார்.
மதுரை அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவருக்கு அடுத்தபடியாக மிதுன் 2 விக்கெட்டுகளையும், முருகன் அஸ்வின், மணிகண்டன் மற்றும் குர்ஜப்னீத் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
7 பேர் ஒற்றை இலக்கம்: இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, கோவை அணியின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் அதிகபட்சமாக கார்த்திக் மணிகண்டன் (33 ரன்), ஜெகதீசன் கௌசிக் (27 ரன்), மிதுன் (26 ரன்), தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களை கூட தாண்ட முடியாமல் விக்கெட்டுகள் பறிகொடுத்து வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது மதுரை, இதனால் 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கோவை கிங்ஸ்.
அரையிறுதியில் கோவை: இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலையில் களமிறங்கிய மதுரை அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதே போல் 6 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றுள்ள கோவை கிங்ஸ், 10 புள்ளிகளை பெற்று நடப்பு டிஎன்பிஎல் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: INDW VS NEPW; நேபாள மகளிர் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் அணி!