பாரீஸ்: உலகின் விளையாட்டு திருவிழா என்று அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் 4 முறை பதக்கம் வென்ற ஜமைக்கா நாட்டின் ஷெல்லி-ஆன் பிரேசர்-பிரைஸ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் நடப்பு உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்ற ஷிக்காரிய ரிச்சர்ட்சன், பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இறுதிப் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடினார் செயின்ட் லுாசியாவின் ஜூலியன் ஆப்பிரட்.
Julien Alfred of Saint Lucia 🇱🇨 just derailed the USA and Jamaica’s hype train by winning the gold for the women’s 100 meters final! Sha’carri came second!
— MAJ (@maryam_Jidayi) August 3, 2024
💯 🤷♀️ #OlympicGames #Paris2024 pic.twitter.com/A3938mOzlJ
குறிப்பாக பந்தய தூரத்தை 10.72 வினாடியில் கடந்து அனைவரையும் வியப்படையச் செய்தார். அமெரிக்க வீராங்கனை ஷிக்காரியா ரிச்சர்ட்சன் 16 வினாடிகள் பின் தங்கி தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் ஷிக்காரியா ரிச்சர்ட்சன் (10.87) வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஆன மெலிசா ஜெபர்ஸன் 10 புள்ளி 92 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். நான்காவது இடத்தை 10.96 வினாடிகளில் கடந்து பிரிட்டன் வீராங்கனை டேரில் நீதா பிடித்தார்.
நாட்டிற்கான முதல் பதக்கம்: ஒலிம்பிக் போட்டி என்றாலே அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் மத்தியில் எத்தனை பதங்கங்களை வெல்வது என்ற கடுமையான போட்டி நிலவும். இதற்கிடையில் சில வீரர்கள் மட்டுமே தன்னுடைய நாட்டிற்காக முதல் பதங்கங்களை வென்று உலக நாடுகளை திரும்பி பார்க்க வைப்பார்.
அந்த வரிசையில் தற்போது இணைந்து இருக்கிறார் செயின்ட் லுாசியாவை சேர்ந்த வீராங்கனை ஜூலியன் ஆப்பிரட். வெஸ்ட் இண்டீசின் கிழக்கு கரீபியனில் உள்ள ஒரு குட்டி தீவுதான் செயின்ட் லுாசியா ஆகும். இங்குள்ள மொத்த மக்கள் தொகையே 2 லட்சத்திற்கு குறைவு என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த குட்டி தீவில் இருந்து தடகளத்தில் 2, படகு போட்டி, நீச்சலில் தலா ஒருவர் என 4 பேர் நடப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உள்ளனர். கடந்த 1996ல் நடந்த அட்லாண்டா நடைபெற்ற ஒலிம்பிக்கில் செயின்ட் லுாசியா முதன்முறையாக பங்கேற்றது.
Julien Alfred put her country on the Olympic map!
— Paris 2024 (@Paris2024) August 4, 2024
With a stunning 10.72 in the Stade de France, she wins the first medal ever for Saint Lucia!
Congrats champ 👑
🎨 @muvergraphics pic.twitter.com/rSJcRdlvXn
அதனை தொடர்ந்து பல்வேறு ஒலிம்பிக் தொடர்களில் அந்தநாட்டு வீரர்கள் பங்கேற்றனர். ஆனால் அவர்களால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் போனது. இந்தநிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்று செயின்ட் லுாசியா கனவை நனவாக்கியுள்ளார் ஜூலியன் ஆல்பிரட்.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று யார் யாருக்கெல்லாம் போட்டிகள்? முழுத் தகவல்!