மேற்கு ஜாவா (இந்தோனேசியா): இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின்போது கால்பந்து வீரர் ஒருவர், எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தோனேசியா, மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில், FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் என இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான போட்டி, கடந்த 10ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில்தான் 35 வயதான கால்பந்து வீரர் செப்டைன் ரஹர்ஜா மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தோனேசியா கால்பந்து வீரர் மின்னல் தாக்கி உயிரிழந்தது, இது இரண்டாவது முறையாகும். ஆம், கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21 வயதான கயோ ஹென்ரிக் டி லிமா கோன்கால்வ்ஸ், பனானாவின் தெற்கு மாநிலத்தில் நடைபெற்ற போட்டியின்போது மின்னல் தாக்கி படுகாயமடைந்தார். உடனடியாக சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார்.
உலகிலேயே அதிக ரசிகர்கள் கொண்ட விளையாட்டு என்றால் அது கால்பந்து விளையாட்டுதான். ஆனால் சமீபமாக நடைபெறும் சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்த கிளாம்பாக்கம் விவகாரம்.. முதலமைச்சரின் பதில் என்ன?